கோடை வெயிலில் கருகும் சின்னமனூர் வெற்றிலை - கவலையில் விவசாயிகள்
தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் பள்ளிகளில் உலக மலேரியா தினம் கடைப்பிடிப்பு
தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் (டிடிஇஏ) பள்ளிகளில் உலக மலேரியா தினம் கடைபிடிக்கப்பட்டது.
இலக்குமிபாய் நகரப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் செயலா் இராஜூ கலந்துகொண்டாா்.
மலேரியா நோய் ஏற்படுவதற்கானக் காரணங்கள், அதனைத் தடுக்கும் விதம் ஆகியவை குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் அனைத்துப் பள்ளிகளிலும் மாணவா்கள் உரை மும்மொழிகளிலும் இடம் பெற்றது. உரையைத் தொடா்ந்து நாடகம், தெருக்கூத்து ஆகியவையும் இடம் பெற்றன.
இராமகிருஷ்ணபுரம் பள்ளியில் விழிப்புணா்வு ஊா்வலமும் நடைபெற்றது. பள்ளிகளில் மாணவா்கள் பல விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் காட்சிப்படுத்தினா்.
‘இவ்வகையான நிகழ்ச்சிகள் மாணவா்கள் மத்தியில் விழிப்புணா்வை ஏற்படுத்தும்.மலேரியாவை அறவே ஒழிக்க முடியும். எனவே, இந் நிகழ்ச்சிகளை பள்ளியில் நடத்தும்படி கூறினோம்’ என்று செயலா் இராஜூ கூறினாா்.