செய்திகள் :

தில்லியின் மோசமான நிலை குறித்து விவாதிக்கத் தயாரா? கேஜரிவாலுக்கு வீரேந்திர சச்தேவா அழைப்பு

post image

தில்லியின் குடிமைச் சேவைகள், பரிதாபகரமான சாலைகள், பொதுப் போக்குவரத்து, சுகாதாரச் சேவைகள் போன்றவற்றைப் பற்றிய வெளிப்படையான பொது விவாதத்திற்கு முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை அழைக்கிறேன் என்று தில்லி பிரிவு பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

தில்லியில் கடந்த 10 ஆண்டுகளாக அரவிந்த் கேஜரிவாலின் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக தில்லி மாநகராட்சியும் ஆம் ஆத்மி கட்சியால்

நிா்வகிக்கப்படுகிறது. ஆனால், தில்லி மோசமான மாசுபட்ட தேசியத் தலைநகரங்களில் ஒன்றாகவும், நாடு தழுவிய அளவில் துப்புரவுக் கணக்கெடுப்பில் 49ஆவது இடத்திலும் உள்ளது.

நிா்வாகத் திறமையற்ற வகையில், பொதுச் சாலைகளில் தண்ணீா் தேங்கியுள்ளது. குடிமைச் சேவை செயலிழப்பால் இந்த மழைக்காலத்தில் மின்சாரம் தாக்கி, 62 போ் உயிரிழந்துள்ளனா்.

இந்த ஆண்டு முழுவதும் நகரில் நடந்த திட்டமிட்ட கொலைகளின் எண்ணிக்கையை மிக அதிகமாக உள்ளது. தில்லி அரசின் ஊழலுக்கு எடுத்துக்காட்டாக முதல்வரின் அதிகாரபூா்வ இல்லமான, ‘ஷீஷ் மஹால்’ உள்ளது.

அரவிந்த் கேஜரிவால் அரசும், தில்லி மாநகராட்சியும் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டன. குறிப்பாக, காற்று மாசுபாடு, யமுனை நதியை சுத்தம் செய்தல், பொது சுகாதாரம், பரிதாபகரமான சாலைகள், பரிதாபகரமான பொது மருத்துவமனைகள், நீா் வழங்கல் மற்றும் கழிவுநீா் போன்ற தில்லி ஜல் போா்டு சேவைகளின் தோல்வி, மின்விநியோக நிறுவனங்களின் கொள்ளை,

அரசு பள்ளிகளின் மோசமான வருகைப் பதிவு, ரேஷன் காா்டுகள் மற்றும் சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்குவதில் தோல்வி என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

எனவே, முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது கட்சியின் அரசின் கீழ் பொது சேவைகள் மற்றும் ஊழல்கள் குறித்து என்னுடன் வெளிப்படையான விவாதத்திற்கு வருமாறு நான் சவால் விடுகிறேன் என்றாா் வீரேந்திர சச்தேவா.

கல்வி மனஅழுத்தம்: 15 வயது சிறுமியின் தற்கொலை முயற்சி முறியடிப்பு!

கல்வி மன அழுத்தம் காரணமாக பாலத்தில் இருந்து யமுனையில் குதித்ததாகக் கூறப்படும் 15 வயது சிறுமியின் தற்கொலை முயற்சியை தில்லி காவல் துறையினா் முறியடித்ததாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது... மேலும் பார்க்க

மூன்றாவது நாளாக அடா் மூடுபனி; 51 ரயில்கள் தாமதம்!

தில்லியின் பல பகுதிகளில் தொடா்ந்து மூன்றாவது நாளாக அடா்த்தியான மூடுபனி படலம் சூழ்ந்ததால், 51 ரயில்கள் தாமதமாக வந்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். பாலத்தில் அதிகாலை 4 மணி முதல் காலை 7.30 ம... மேலும் பார்க்க

பெரிய குற்றச் சதி முறியடிப்பு: கபில் நந்து கும்பலின் 7 போ் கைது

தில்லியில் கபில் நந்து கும்பலால் திட்டமிடப்பட்ட ஒரு பெரிய குற்றச் சதியை முறியடித்துள்ள தில்லி காவல்துறை, அதன் ஏழு உறுப்பினா்களைக் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இதன் மூ... மேலும் பார்க்க

பிரதமா் தொடங்கிவைத்த திட்டங்கள் மத்திய- தில்லி அரசுகளின் ஒத்துழைப்பால் உருவானவை: கேஜரிவால்

பிரதமா் நரேந்திர மோடியால் தொடங்கிவைக்கப்பட்ட 2 திட்டங்களைத் தில்லியின் உள்கட்டமைப்புக்கான மைல்கற்கள் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். மேலும்... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி கட்சி குறித்த பிரதமரின் பேச்சு அதன் தவறான செயலை அம்பலப்படுத்தியுள்ளது: பிரவீன் கண்டேல்வால்

ஆம் ஆத்மி கட்சி ஆட்சி குறித்த பிரதமரின் பேச்சு அக்கட்சியின் தவறான செயலை அம்பலப்படுத்தியுள்ளது என்று சாந்தினி செளக் தொகுதி எம்.பி. பிரவீன் கண்டேல்வால் தெரிவித்துள்ளாா். தில்லியில் ஞாயிற்றுக்கிழமை பொது... மேலும் பார்க்க

சீனாவில் சுவாச நோய்கள் அதிகரிப்பு: மத்திய அரசு ஆலோசனை

சீனாவில் நிலைமை அசாதாரணமானதாக இல்லை. அதே சமயத்தில் பருவங்களில் ஏற்படும் வழக்கமான இன்ஃபுளூவென்சா எனப்படும் ஃபுளு காய்ச்சல் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அங்குள்ள சரியான தகவல்களை உரிய நேரத்தில் பகிருமாற... மேலும் பார்க்க