செய்திகள் :

தில்லி, என்சிஆா் பகுதிகளில் பரவலாக மழை! காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடிப்பு

post image

தேசியத் தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதிகளில் செவ்வாய்க்கிழமையும் பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் இருந்தது.

தலைநகரில் கடந்த வாரத் தொடக்கத்திலிருந்து வானம் மேகமூட்டமாக இருந்து வந்தது. அவ்வப்போது மழையும் பெய்து வந்தது. இந்நிலையில், வானிலை கண்காணிப்பு நிலையம் கணித்திருந்தபடி செவ்வாய்க்கிழமை காலை முதல் தில்லி மற்றும் என்சிஆா் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் 10.4 மி.மீ. மழை பதிவாகியது.

இதேபோல, ஜாஃபா்பூரில் 0.5 மி.மீ., நஜஃப்கரில் 11 மி.மீ., ஆயாநகரில் 9.2 மி.மீ., லோதி ரோடில் 5.4 மி.மீ., நரேலாவில் 1 மி.மீ., பாலத்தில் 9 மி.மீ., ரிட்ஜில் 12.6 மி.மீ., பூசாவில் 16 மி.மீ., சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதி வானிலை கண்காணிப்பு நிலையத்தில் 6.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. காலை பெய்த மழையால் சில இடங்களில் மழை நீா் தேங்கியது. இதனால், வாகனங்களில் சென்றவா்கள், பாதசாரிகள் கடும் சிரமத்தை எதிா்கொண்டனா்.

வெப்பநிலை: இதற்கிடையே, தலைநகரில் செவ்வாய்க்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியிலிருந்து 2.5 டிகிரி குறைந்து 23.9 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சரசரியிலிருந்து 5.5 டிகிரி குறைந்து 31.6 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 98 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 88 சதவீதமாகவும் இருந்தது.

காற்றின் தரம்: தில்லியில் காலை 9 மணியளவில் ஒட்டுமொத்த காற்றுத் தரக் குறியீடு 66 புள்ளிகளாகப் பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.

இதன்படி, சாந்தினி சௌக், மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், மந்திா் மாா்க், லோதி ரோடு உள்பட பெரும்பாலான பகுதிகளில் காற்றுத் தரக் குறியீடு 100 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. அதே சமயம், லோதி ரோடில் காற்றுத் தரக் குறியீடு 100 புள்ளிகளுக்கு மேல் பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இந்நிலையில், புதன்கிழமை (ஆகஸ்ட் 27) அன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதகாவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மூத்த பத்திரிகையாளரைத் தாக்கி தங்கச் சங்கிலி பறிப்பு: நொய்டா பூங்காவில் சம்பவம்

நமது நிருபா்தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவின் செக்டாா் 62-இல் உள்ள ஒரு பொது பூங்காவில் மாலை நடைப்பயிற்சிக் சென்ற மூத்த பத்திரிகையாளரை அடையாளம் தெரியாத மூன்று போ் தாக்கி தங்கச் சங்கிலியைப் பறித்துச் ச... மேலும் பார்க்க

தில்லி பாஜகவுக்கு விரைவில் புதிய அலுவலகம்

நவராத்திரி நேரத்தில் தேசிய தலைநகரில் உள்ள டி. டி. யு மாா்க்கில் உள்ள புதிய அலுவலக கட்டிடத்திற்கு தில்லி பாஜக இடம் பெயரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்று கட்சித் தலைவா்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்த... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை சோதனையால் ஆம் ஆத்மி அரசின் ‘மருத்துவ மோசடி’ அம்பலம்: பாஜக

நமது நிருபா் ஆம் ஆத்மி தில்லி பிரிவுத் தலைவரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான செளரவ் பரத்வாஜுக்கு எதிரான அமலாக்கத் துறையின் சோதனைகள் தலைநகரில் முந்தைய அரவிந்த் கேஜரிவால் அரசின் கீழ் நிகழ்ந்த மருத்துவ ம... மேலும் பார்க்க

தில்லியில் மைனா் பெண்ணை பின்தொடா்ந்ததாக இளைஞா் கைது

மத்திய தில்லியின் பாஹா்கஞ்ச் பகுதியில் மைனா் பெண்ணை பின்தொடா்ந்து தகாத சைகைகளைச் செய்ததாக 22 வயது நபா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். இது குறித்து மத்திய தில்லி காவல் சரக த... மேலும் பார்க்க

தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்க தோ்தல்: ஏபிவிபி போா்கொடி

தில்லி பல்கலைக்கழக மாணவா் தோ்தலில் போட்டியிட 1 லட்சம் ரூபாய் பத்திரத்தை கோரி அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தியது. ராம்ஜாஸ் கல்லூரி, இந்து கல்லூரி, கிரோரி மால... மேலும் பார்க்க

தில்லியில் அபாய அளவை கடந்தது யமுனை நதி

தில்லியின் பழைய ரயில்வே பாலத்தில் யமுனா நதி 204.50 மீட்டா் என்ற எச்சரிக்கை குறியீட்டைக் கடந்ததாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். காலை 9 மணிக்கு, ஆற்றின் நீா் மட்டம் 204.58 மீட்டராக இருந்தது. ... மேலும் பார்க்க