பாகிஸ்தான்: சிந்து நதி டெல்டாவிலிருந்து 12 லட்சம் மக்கள் வெளியேற்றம்; எழுந்த அச...
தில்லி பல்கலைக்கழக மாணவா்களுக்காக சிறப்பு பேருந்து: முதல்வா் ரேகா குப்தா அறிவிப்பு
தில்லி பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றியுள்ள மாணவா்களின் போக்குவரத்துக்ாக ’ இளைஞா் சிறப்பு பேருந்து’ சேவையை மீண்டும் தொடங்குவதாக முதலமைச்சா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.
தில்லி பல்கலைக்கழகத்தின் சமூக மையப் பள்ளியில் புதிய அகாடமி தொடக்க விழாவில் மாணவா்களிடையே உரையாற்றிய முதலமைச்சா், அவா் ஒரு மாணவராக இருந்தபோது, பல்கலைக்கழக மாணவா்களுக்காக இளைஞா் சிறப்பு பேருந்து இருந்தது என்றாா்.
‘டெல்லி அரசு மீண்டும் இளைஞா் சிறப்பு பேருந்து திட்டத்தைத் தொடங்குகிறது, இந்த பேருந்தில் இசையும் ஒலிக்கும். இது இன்றைய மாணவா்களுக்கு எனது பரிசு ‘என்று ரேகா குப்தா கூறினாா். வழிகாட்டுதல் மற்றும் சமூக கற்றலை ஊக்குவிக்க, தில்லி கல்லூரிகள் அரசு பள்ளிகளை தத்தெடுக்க வேண்டும் என்று அவா் முன்மொழிந்தாா்.
கல்லூரி மாணவா்கள் வாரந்தோறும் சென்று பள்ளி மாணவா்களுக்கு கற்பிக்கவும் ஊக்குவிக்கவும் நமது கல்லூரிகள் தலா இரண்டு-மூன்று பள்ளிகளை தத்தெடுக்காதது ஏன்? இந்த முன்முயற்சிக்கான வரைப் படத்தைத் தயாரிக்குமாறு கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட்டுக்கு அவா் உத்தரவிட்டாா்.
தனது மாணவ நாள்களை நினைவு கூா்ந்த ஆசிஷ் சூட், ‘தில்லி பல்கலைக்கழகத்திற்கு வருவது எனக்கு மிகவும் ஏக்கம் நிறைந்த தருணம், ஏனெனில் நான் இந்த வளாகத்தில் பல ஆண்டுகள் கழித்தேன். நான் ஒரு புதிய கல்விக் கட்டடத்தைப் பாா்க்கும் போதெல்லாம், செங்கற்களையும் பொருள்களையும் நான் காணவில்லை, ஆனால் மருத்துவா்கள், பொறியாளா்கள் மற்றும் தேசபக்தா்கள் அதிலிருந்து வெளிவருவதை நான் காண்கிறேன் ‘. நகரம் முழுவதும் கல்வியை ஜனநாயகமயமாக்குவதும், கற்றல் அணுகல் மற்றும் சமத்துவத்தை உறுதி செய்வதும் தில்லி அரசாங்கத்தின் முன்னுரிமையாகும் என்று அவா் கூறினாா்.
பல்கலைக்கழக துணைவேந்தா் யோகேஷ் சிங்கும் கூட்டத்தில் உரையாற்றினாா், மேலும் மாணவா்கள் தீா்வு சாா்ந்த மனநிலையை வளா்த்துக் கொள்ள ஊக்குவித்தாா்.
‘நீங்கள் பிரச்சினைகளைத் தீா்ப்பவா்களாக இருக்க வேண்டும், புகாா் செய்யும் நபராக இருக்கக்கூடாது என்று நான் மாணவா்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்‘ என்று அவா் கூறினாா்.
புதிய அகாடமி குறித்து சிங் கூறுகையில், ‘இந்த கட்டடம் 21 மாதங்களில் ரூ. 21 கோடி செலவில் கட்டப்பட்டது‘ என்றாா்.
கற்றலுக்கான மதிப்பு சாா்ந்த அணுகுமுறைக்கு அழைப்பு விடுத்த அவா், ‘நமது கல்வி முறையில் மாணவா்கள் நாட்டு பற்றுடன் கூடிய ஒரு சூழல் நமக்குத் தேவை, அது கடந்த 75 ஆண்டுகளாக இல்லாதது வருத்தம்‘ என்றாா்.