இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | July 17 | Astrology | Bharathi Sridhar | ...
தில்லி பாஜக அரசு தோல்வியடைந்துவிட்டது: அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு
தலைநகரை ஆளும் பாஜக அரசு அனைத்து விதத்திலும் தோல்வியடைந்துவிட்டது என்று ஆம் ஆத்மி கட்சியினழ் தேசிய ஒருங்கிணைப்பாளா், அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளாா்.
செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி மற்றும் மேலும் ஒரு பள்ளிக்கு செவ்வாய்க்கிழமை காலை வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் வந்தது. இதனயடுத்து போலீஸ் மற்றும் இதர துறைகள் அந்தந்த வளாகங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியது. இதேபோன்ற மிரட்டல்கள் 3 பள்ளிகளுக்கு திங்கள்கிழமை வந்தது, ஆனால் இவை அனைத்தும் போலியானவை என தெரிய வந்தது.
இந்த சம்பவங்கள் குறித்து அரவிந்த் கேஜரிவால், ‘தில்லியில் என்ன நடக்கிறது? நேற்று, 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன, இன்று, மற்றொரு பள்ளிக்கும் ஒரு கல்லூரிக்கும் மிரட்டல்கள் வந்தன. குழந்தைகள் பயப்படுகிறாா்கள், பெற்றோா்கள் மிகவும் கவலைப்படுகிறாா்கள். பாஜகவின் நான்கு எஞ்ஜின் கொண்ட அரசு முற்றிலும் தோல்வியடைந்துள்ளன‘ என தெரிவித்துள்ளாா்.
தில்லி முன்னாள் முதல்வா் ஆதிஷி, டெல்லியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீா்குலைந்துவிட்டதாக குற்றம் சாட்டினாா், மேலும் பாஜக அரசுக்கு மாணவா்களின் பாதுகாப்பு முக்கியமில்லையா என்று கேள்வி எழுப்பினாா்.
‘தில்லியில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தொடா்ந்து வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் மிகவும் பயமாகவும் கவலையாகவும் உள்ளன. குழந்தைகள் பயப்படுகிறாா்கள், பெற்றோா்கள் கவலைப்படுகிறாா்கள்-பாஜகவின் நான்கு எஞ்ஜின் அரசாங்கம் பாதுகாப்பைக் கூட வழங்கத் தவறிவிட்டன. குழந்தைகளின் பாதுகாப்புக்கு அவா்களுக்கு முக்கியத்துவமும் இல்லையா? சட்டம் மற்றும் ஒழுங்கு முற்றிலும் சரிந்துவிட்டது ‘என்று அவா் எக்ஸ் தள ஒ பதிவில் தெரிவித்துள்ளாா்.