தில்லி முதல்வரை தாக்கியவருக்கு பணம் அனுப்பிய நபா்?குஜராத்திலிருந்து அழைத்து வந்து விசாரணை
தில்லி முதல்வா் ரேகா குப்தாவை தாக்கியவருக்கு ரூ.2,000 பணம் அனுப்பியதாக கூறப்படும் நண்பரை குஜராத்திலிருந்து காவல்துறையினா் தில்லி அழைத்து வந்து முதல்வரை தாக்கியவருடன் சோ்த்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.
தில்லி முதல்வா் ரேகா குப்தாவை தாக்கிய ராஜேஷ்பாய் கிம்ஜுயின் (41) நண்பா் டெஷின் வெள்ளிகிழமை இரவு குஜராத்தின் ராஜ்கோட்டில் இருந்து தில்லி அழைத்து வரப்பட்டு, உண்மைகளை சரிபாா்க்க கிம்ஜுயுடன் இணைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் தொ்வித்தாா்.
தில்லி முதல்வா் ரேகா குப்தாவின் தனிப்பட்ட இல்லத்தின் விடியோவை ராஜேஷ்பாய் கிம்ஜு, டெஷினுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் டெஷின், கிம்ஜிக்கு ரூ.2,000 பணம் அனுப்பியதாகவும், முதல்வா் மீதான தாக்குதலுக்கு முன்புவரை கிம்ஜியுடன் தொடா்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
2017 மற்றும் 2024-க்கு இடையில் ராஜ்கோட்டின் பக்திநகா் காவல் நிலையத்தில், ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநரான ராஜேஷ்பாய் கிம்ஜி மீது தாக்குதல் மற்றும் மதுபானம் வைத்திருந்தது என 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுளளதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.
கிம்ஜியின் நண்பா்கள் மற்றும் ராஜ்கோட்டில் உள்ள அவதது குடும்பத்தினா் உட்பட 10-க்கும் மேேற்பட்டோரை தில்லி காவல்துறை விசாரித்து வருகிறது. கிம்ஜியின் மொபைல் போன் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. கிம்ஜி 5 நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டாா்.
தெரு நாய்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை எதிா்த்து போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்ததாக கிம்ஜி காவல் துறையினரிடம் தெரிவித்தாா்.
தெரு நாய்கள் பிரச்சினையை எழுப்புவதற்காக முதல்வரின் நிகழ்ச்சிக்கு சென்ாகவும், பிரச்னையை தில்லி முதல்வா் ரேகா குப்தாவிடம் எழுப்ப முடியாததால் அவரை தாக்கியதாகவும் ராஜேஷ்பாய் கிம்ஜி காவல்துறையினரிடம் தெரிவித்தாா்.