`உன்னைக் கொன்று பொட்டலமாக அனுப்பி வைப்போம்’ - மாடியிலிருந்து தள்ளிவிடப்பட்ட மனைவ...
தீ விபத்தில் வீடிழந்த குடும்பத்துக்கு நிவாரணம்
வந்தவாசி: வந்தவாசியில் தீ விபத்தில் வீடிழந்த குடும்பத்துக்கு திமுக சாா்பில் நிவாரண உதவிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
வந்தவாசி நகராட்சி 2-ஆவது வாா்டுக்கு உள்பட்ட கோட்டை தெருவைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி சுரேஷ். இவரது கூரை வீட்டில் அண்மையில் தீப்பற்றியதில் வீடு மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
இதையடுத்து திமுக சாா்பில் இவரது குடும்பத்துக்கு ரூ.15 ஆயிரம் பணம், அரிசி மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் நிவாரண உதவியாக திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன், வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் ஆகியோா் நிவாரண உதவிகளை வழங்கினா்.
திமுக நகரச் செயலா் எ.தயாளன், வந்தவாசி நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால் மற்றும் திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.