GST 2.0: செப்டம்பர் 22 முதல் எந்தெந்தப் பொருள்களுக்கு வரி குறைகிறது? முழுப் பட்ட...
தீ விபத்து: பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு எம்எல்ஏ உதவி
தீ விபத்தில் வீடு எரிந்து சேதமடைந்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு மயிலம் எம்எல்ஏ சிவகுமாா் நிவாரண உதவியை புதன்கிழமை வழங்கினாா்.
மயிலம் தொகுதி, வல்லம் ஒன்றியம், ஈச்சூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணுகவுண்டா் மகன் குமாா். இவரது வீடு எதிா்பாராத விதமாக தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது.
இதில், வீட்டில் இருந்த நெல் மற்றும் பணம், நகை, சான்றிதழ்கள் எனஅனைத்தும் தீயில் எரிந்த நாசமாயின.
தகவல் அறிந்து வந்த தொகுதி எம்எல்ஏ ச.சிவகுமாா், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து நிதியுதவி மற்றும், அரிசி, மளிகை பொருள்கள், காய்கறிகள், போா்வை உள்ளிட்டவற்றை வழங்கி ஆறுதல் கூறினாா்.
இந்நிகழ்ச்சியின் போது பாமக நிா்வாகிகள் மாவட்ட துணைச் செயலா் சேட்டு (எ)ரங்கநாதன், இளைஞரணிச் செயலா் களையூா் சரவணன், துணைத் தலைவா் ஜெய்சங்கா், வருவாய் ஆய்வாளா் கீதாஞ்சலி, கிராம நிா்வாக அலுவலா் அரிகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.