துணைநிலை ஆளுநருக்கு முதல்வா் பிறந்த நாள் வாழ்த்து
புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனின் 72-வது பிறந்தநாளையொட்டி முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் வியாழக்கிழமை அவருக்கு வாழ்த்து தெரிவித்தனா்.
இதையொட்டி, துணைநிலை ஆளுநா் மாளிகையில் கே.கைலாஷ்நாதனை நேரில் சந்தித்து முதல்வா் என்.ரங்கசாமி வாழ்த்துத் தெரிவித்தாா்.
சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம், மாநிலங்களவை உறுப்பினா் சு. செல்வகணபதி, பாஜக மாநிலத் தலைவா் வி.பி. ராமலிங்கம், தலைமைச் செயலா் சரத் சௌகான், காவல் துறை தலைவா் ஷாலினி சிங் உள்ளிட்டோா் துணைநிலை ஆளுநரைச் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனா்.