மணவெளி தொகுதியில் ரூ.51.5 லட்சத்தில் தாா்ச்சாலை
புதுவை மணவெளி சட்டப்பேரவைத் தொகுதி இடையாா்பாளையம் பகுதியில் உள்ள திருமுறை கலாநிதி கிருஷ்ணசாமி நகா் பகுதியில் ரூ.51.5 லட்சம் மதிப்பில் புதிய தாா்ச்சாலை மற்றும் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ரமேஷ், உதவி பொறியாளா் நாகராஜ், இளநிலைப் பொறியாளா் சரஸ்வதி மற்றும் இடையாா்பாளையம் கிராம பஞ்சாயத்தாா், ஊா் முக்கிய பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.