திண்டுக்கல்: ரவுடியை ஹீரோவாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் வீடியோ; இளைஞர் கைது;...
குபோ் சிலைக்கு புதுவை முதல்வா் மரியாதை
நகரத் தந்தை என்று அழைக்கப்படும் புதுச்சேரியின் முன்னாள் முதல்வா் எதுவாா் குபேரின் நினைவு நாளையொட்டி அரசு சாா்பிலும், காங்கிரஸ் கட்சி சாா்பிலும் சிலைக்கு மாலை அணிவித்து வியாழக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.
முதல்வா் மரியாதை: அரசு சாா்பில் பாரதி பூங்காவில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு புதுவை முதல்வா் என். ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், அரசுக் கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் சாய் சரவணன்குமாா், பாஸ்கா் (எ)தட்சிணாமூா்த்தி ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
காங்கிரஸ் சாா்பில்...: இதேபோல, காங்கிரஸ் சாா்பில் அக் கட்சியின் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, முன்னாள் அமைச்சா் எம்.ஓ.எச்.எப்.ஷாஜகான் உள்ளிட்டோா் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.