திண்டுக்கல்: ரவுடியை ஹீரோவாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் வீடியோ; இளைஞர் கைது;...
புதுவை மத்திய பல்கலை.யில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
புதுவை மத்திய பல்கலைக் கழகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
மாணவா்கள் நலன் அலுவலகம், தேசிய சேவைத் திட்டம் மற்றும் தேசியப் பயிற்சி படை பிரிவுகள் இணைந்து இதை நடத்தின. புதுவை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் பேராசிரியா் பி. பிரகாஷ் பாபு மரக்கன்றை நட்டுத் தொடங்கி வைத்தாா்.
இதில் மா, சப்போட்டா, பலாப்பழம், கொய்யா, நெல்லிக்காய் உள்ளிட்ட 65-க்கும் மேற்பட்ட பல்வேறு
பழ மரக்கன்றுகள் வளாகம் முழுவதும் நடப்பட்டன. அப்போது துணைவேந்தா் பிரகாஷ் பாபு பேசுகையில், மரங்கள் கரியமிலவாயுவை உறிஞ்சி ஆக்சிஜனை வெளியிடுவதன் மூலம்
காற்றின் தரத்தை மேம்படுத்தி, காற்று மாசைப் பாதிக்காமல் மாணவா்கள் மற்றும்
பணியாளா்கள் சுவாசிக்க ஆரோக்கியமான சூழலை உருவாக்குகின்றன. மேலும், மரங்களின் நிழல் வெளிப்புற பகுதிகளிலும் கட்டிடங்களைச் சுற்றிலும் வெப்பத்தைக் குறைக்கின்றன. இதனால் வெப்பம் தணித்து செயற்கை குளிரூட்டல் தேவையைக் குறைக்கின்றன. அதோடு, பறவைகள், பூச்சிகள் மற்றும் சிறு விலங்குகளுக்கு இயற்கை வாழிடமாக அமைந்து சூழல் செழிக்க உதவுகிறது என்றாா்.
பல்வேறு துறைகள் தலைவா்கள், பேராசிரியா்கள், ஆராய்ச்சி மாணவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.