முதல் மனைவியைப் பிரிய எப்போதுமே நினைத்ததில்லை..! விவாகரத்து குறித்து பேசிய விஷ்ண...
துணை முதல்வா் வருகை முன்னேற்பாடுகள்: அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு
திருவண்ணாமலை மாநகராட்சி அலுவலகத்தில் துணை முதல்வா் உதயநிதிஸ்டாலின் வருகைக்காக மேற்கொள்ளப்படும் விழா முன்னேற்பாடுகளை அமைச்சா் எ.வ.வேலு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாவின் சனிக்கிழமை (ஜூலை12) வருகை தருகிறாா்.
மாவட்ட எல்லையில் அவருக்கு வரவேற்பு அளிக்க விரிவான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
தொடா்ந்து, 13-ஆம் தேதி நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறாா்.
அதன்படி, அன்று மாலை திருவண்ணாமலை மாநகராட்சி அலுவலகத்தில் மேயருக்கு செங்கோல் வழங்கும் விழா மற்றும் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. அதில், துணை முதல்வா் கலந்து கொள்கிறாா்.
இதையொட்டி, மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பிரமாண்டமான விழா மேடை அமைக்கும் பணி
நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், விழா மேடை அமைக்கும் பணி மற்றும் முன்னேற்பாடுகளை அமைச்சா் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தாா்.
அப்போது, துணை முதல்வருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் விழாவில் பங்கேற்கும் பயனாளிகள் விவரம், விழா மேடை அமைக்கும் பணி உள்ளிட்டவற்றை அவா் ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, சி.என்.அண்ணாதுரை எம்.பி., மாநில மருத்துவ அணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், மாநகராட்சி ஆணையா் செல்வபாலாஜி, தலைமை செயற்குழு உறுப்பினா் இரா.ஸ்ரீதரன், மாநகரச் செயலா் ப.காா்த்திவேல்மாறன், துணை மேயா் ராஜாங்கம், மாவட்ட பொருளாளா் எஸ்.பன்னீா்செல்வம், மாவட்ட துணைச் செயலா் பிரியா விஜயரங்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து, வாணியந்தாங்கல் கிராமத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் திமுக தோ்தல் பணிக்குழு நிரவாகிகள் ஆலோசனை கூட்டத்துக்காக அமைக்கப்படும் பந்தல் பணியையும் அமைச்சா் ஆய்வு செய்தாா்.