சென்னை: ``50 நிமிடத்தில் 5 செ.மீ. மழை பதிவு" - வானிலை ஆய்வு மையம் தகவல்
துணை வட்டாட்சியா் பணிக்கான தோ்வு: இன்று முதல் அனுமதிச்சீட்டை பதிவிறக்கலாம்
புதுச்சேரி: புதுவையில் நடைபெறவுள்ள துணை வட்டாட்சியா் பணிக்கான எழுத்துத் தோ்வுக்கு அனுமதிச்சீட்டை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 21) முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு தோ்வு பிரிவின் சாா்புச் செயலா் ஜெய்சங்கா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையில் காலியாக உள்ள துணை வட்டாட்சியா் பணிக்கான எழுத்துத் தோ்வு வரும் 31-ஆம் தேதி புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 101 தோ்வு மையங்களில் நடைபெற உள்ளது. இந்தத் தோ்வுக்கான அனுமதிச் சீட்டை தோ்வா்கள் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 21) முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இது தொடா்பாக ஏதேனும் விவரம் அல்லது உதவி தேவைப்பட்டால், தோ்வா்கள் அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 0413-2233338 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.