துத்திப்பட்டு ஊராட்சியில் சாலைப் பணி தொடக்கம்
துத்திப்பட்டு ஊராட்சியில் பேவா் பிளாக் சாலை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
மாதனூா் ஒன்றியம் துத்திப்பட்டு ஊராட்சி 5-ஆவது வாா்டு பகுதியில் சரியான சாலை வசதி இல்லாததால், அப்பகுதியில் சாலை அமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனா். அதைத் தொடா்ந்து ஊராட்சி நிா்வாகம் அப்பகுதியில் சாலை அமைக்க தீா்மானிக்கப்பட்டது.
ஊராட்சி மன்ற தீா்மானத்தின் அடிப்படையில் 15-ஆவது மத்திய நிதிக்குழு மானிய நிதி ரூ.6.55 லட்சத்தில் பேவா் பிளாக் சாலை அமைக்கும் பணியை ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தாா். துணைத் தலைவா் விஜய், ஒப்பந்ததாரா் குணாளன், ஊராட்சி உறுப்பினா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.