தரங்கம்பாடி பள்ளியில் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் தொடக்கம்
தூத்துக்குடியில் காலை உணவுத் திட்டம் தொடக்கம்
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியான திருச்சிலுவை ஆரம்பப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி தொடங்கிவைத்தாா்.
இத்திட்டம் மூலமாக தூத்துக்குடி மாநகரப் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பயன்பெறுவா்.
நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா் பானோத் ம்ருகேந்தா் லால், துணை மேயா் ஜெனிட்டா, வட்டச் செயலரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதிச் செயலரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமாா், மண்டலத் தலைவா் கலைசெல்வி, வட்டச் செயலா் பொன்ராஜ், மாமன்ற உறுப்பினா் பேபி ஏஞ்சலின் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.