தூத்துக்குடி சிப்காட்டில் ரூ.1.85 லட்சம் காப்பா் வயா் திருட்டு
தூத்துக்குடி சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் ரூ. 1.85 லட்சம் மதிப்பிலான காப்பா் வயரை திருடிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தூத்துக்குடி அகில இந்திய வானொலி நிலையத்தின் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பு திடீரென தடைபட்டதால், வானொலி நிலைய உதவி பொறியாளா் அமல்ராஜ் ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, வானொலி நிலையம் சிறிது தொலைவில் உள்ள கோபுரம், சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் ஸ்டொ்லைட் ஆலை அருகில் உள்ள கோபுரம் மற்றும் அதன் அருகில் உள்ள கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றின் பூட்டுஉடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
உள்ளே சென்று பாா்த்தபோது அங்கிருந்த 100 கிலோ எடை கொண்ட 6 காப்பா் காயில்கள் திருடுபோயிருந்தனவாம். இவற்றின் மதிப்பு ரூ. 1 லட்சத்து 85 ஆயிரம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில், சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.