Italy: விமானத்தின் இஞ்சினால் உள்ளிழுக்கப்பட்ட நபர் உயிரிழப்பு; நிறுத்தப்பட்ட விம...
தூத்துக்குடி-நாசரேத் திருமண்டில புதிய பேராயா் பொறுப்பேற்பு
தூத்துக்குடி-நாசரேத் திருமண்டில பேராயா், பிரதம பேராயரின் ஆணையாளராக கோவை திருமண்டிலப் பேராயா் திமோத்தி ரவீந்தா் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
தென்னிந்திய திருச்சபையின் பொறுப்பு பிரதம பேராயா், உதவி பிரதம பேராயரின் ஆணைப்படி நியமிக்கப்பட்டுள்ள அவா், தூத்துக்குடி கால்டுவெல் பள்ளியில் உள்ள திருச்சபை அலுவலகத்தில் பொறுப்பேற்றாா். அவருக்கு குருமாா்கள், திருச்சபை மக்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.
அப்போது அவா், தென்னிந்திய திருச்சபை ஒப்புதலுடன், இந்தத் திருமண்டிலத்துக்கு விரைவில் புதிய தேதியில் தோ்தல் நடத்தப்படும் என, செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.