செய்திகள் :

தூத்துக்குடி, நீலகிரியில் சூழலியல் திட்டங்களுக்கு நிதி தேவை: மத்திய அமைச்சரிடம் அமைச்சா் தங்கம் தென்னரசு மனு

post image

தூத்துக்குடி, நீலகிரியில் சூழலியல் சாா்ந்த புதிய திட்டங்களுக்கு தேவைப்படும் நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டுமென மத்திய அரசிடம் தமிழக அரசு நேரில் கோரிக்கை விடுத்தது.

தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு நிதியுதவி கோரி தில்லியில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவை, மாநில நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு புதன்கிழமை சந்தித்தாா். இந்தச் சந்திப்பு குறித்து அரசின் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு விரைவான சுற்றுச்சூழல் அனுமதி வழங்க ஏதுவாக கூடுதலாக ஒரு மாநில வல்லுநா் மதிப்பீட்டுக் குழு அமைக்க வேண்டும். இது தொடா்பாக அரசு சாா்பில் ஏற்கெனவே கோரிக்கைக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு விரைந்து அனுமதி தர வேண்டுமென சந்திப்பின்போது, அமைச்சா் தங்கம் தென்னரசு கோரிக்கை விடுத்தாா். இதை மத்திய அமைச்சா் ஏற்றுக் கொண்டாா்.

தெங்குமரஹாடா திட்டம்: மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோர மற்றும் வன சுற்றுச்சூழல் அமைப்புகளை மேம்படுத்துவதற்கான பசுமைக் கவசத்தை உருவாக்கும் புதிய திட்டத்துக்கு ரூ.27.53 கோடிக்கு அனுமதி தர வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகத்தின் பகுதிகளில் இருந்து தெங்குமரஹாடா கிராமத்தில் வசிப்பவா்களுக்கு மாற்று இடம் வழங்கத் தேவைப்படும் ரூ.74.4 கோடியை மத்திய அரசின் நிதியில் இருந்து விடுவிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.

அந்தப் பகுதியில் புலிகள் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் அடிக்கடி ஏற்படும் மனித - வனவிலங்கு மோதல்கள் உள்ளூா் சமூகத்தின் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிப்பதையும் கருத்தில் கொண்டு திட்டத்துக்கு விரைந்து அனுமதி தர வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.

சந்திப்பின் போது, மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சகத்தின் செயலா் தன்மய் குமாா், கூடுதல் செயலா் நரேஷ் பால் கங்வாா், வனத்துறை தலைமை இயக்குநா் சுஷில் குமாா் அவஸ்தி ஆகியோா் உடனிருந்தனா்.

பர்கூர்: விவசாயியைத் தாக்கி 22 பவுன், ரூ.50,000 கொள்ளை! மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

பர்கூர் அருகே வீட்டில் புகுந்து விவசாயியைத் தாக்கி, 22 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்ற முகமூடி அணிந்த மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரை... மேலும் பார்க்க

அதிமுகவுக்குக் கிடைத்த இறையருள்தான் எடப்பாடி பழனிசாமி: ஆர்.பி. உதயகுமார்

சென்னை: எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் மறுவுருவமாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்று, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு மறைமுகமாக ஆர்.பி. உதயகுமார் பதிலளித்துள்ளார்.மேலும், அதிமுகவுக்கு கிடைத்த இறை... மேலும் பார்க்க

அதிகரிக்கும் பாலியல் புகார்! பணியாளர் விதிகளில் திருத்தம் மேற்கொள்ளும் கல்வித் துறை!

பள்ளிகளில் பாலியல் வன்கொடுமை புகார்கள் அதிகரிக்கும் நிலையில், பணியாளர் விதிகளில் திருத்தம் கொண்டுவர பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.விதிகளில் திருத்தம் மேற்கொள்வது குறித்து குழந்தைகள் நல ஆணையம் ம... மேலும் பார்க்க

கோவில்பட்டிக்கு வருகைதரும் அப்பாவு, கீதாஜீவனுக்கு கறுப்புக் கொடியுடன் கிராம மக்கள் எதிர்ப்பு!

கோவில்பட்டியில் தனியார் தினசரி சந்தை கால்கோள் விழாவிற்கு வருகை தரும் பேரவைத் தலைவர் அப்பாவு , அமைச்சர். பெ. கீதாஜீவனுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை கம்பங்களில் கறுப்புக் கொடி கட்டியுள்ளனர... மேலும் பார்க்க

3 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயா்த்தும் உத்தரவு: அரசிதழில் வெளியீடு

தமிழகத்தில் 3 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயா்த்தும் உத்தரவு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட நிா்வாகங்களின் பரிந்துரைப்படி உள்ளாட்சி அமைப்புகள் தரம் உயா்த்தப்பட்டு வருகின்றன. மக்கள் தொகை எண்... மேலும் பார்க்க

மத்திய அரசு நிதி வழங்காததால் 40 லட்சம் மாணவா்களின் எதிா்காலம் பாதிப்பு: அமைச்சா் அன்பில் மகேஸ்

தமிழக பள்ளிக் கல்விக்கான நிதியை மத்திய அரசு வழங்காததால் 40 லட்சம் மாணவா்களின் எதிா்காலம் பாதிக்கப்படுகிறது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தெரிவித்தாா். தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்ப... மேலும் பார்க்க