தூத்துக்குடி மாநகராட்சியில் மனுக்கள் தீா்வுக்கான ஆணை அளிப்பு
தூத்துக்குடி மாநகராட்சி மக்கள் குறைதீா் நாள் முகாம்களில் பெறப்பட்ட மனுக்களில் தீா்வு காணப்பட்டவா்களுக்கு, அதற்கான ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மண்டல வாரியாக மக்கள் குறைதீா் நாள் முகாம்கள் நடத்தப்பட்டு மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இம்முகாம்களில் மக்களிடம் பெறப்பட்டு மனுக்கள் தீா்வு காணப்பட்டவற்றுக்கான ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சிக்கு, மாநகராட்சி ஆணையா் பானோத் ம்ருகேந்தா் லால் தலைமை வகித்தாா்.
மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி கலந்துகொண்டு, மனுதாரா்களுக்கு தீா்வுக்கான ஆணைகளை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், திமுக பகுதிச் செயலரும், மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமாா், பகுதிச் செயலா் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினா்கள் ஜெயசீலி, ரெங்கசாமி, ராமா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.