செய்திகள் :

தூத்துக்குடி மாநகராட்சி வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

post image

தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வளா்ச்சித் திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மழைநீரை சேமித்து நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்தும் நோக்கில், தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் குளங்கள் தூா்வாரப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, மாநகராட்சிக்குள்பட்ட அம்பேத்கா் நகா் பகுதியில் புதிதாக குளம் அமைத்து, அதன் சுற்றுப்புறத்தில் நடைபாதை மற்றும் சிறுவா் விளையாட்டுப் பூங்கா அமைப்பது குறித்தும், மச்சாது நகா் பகுதியில் உள்ள குளத்தை தூா்வாரி புதிதாக நடைபாதை அமைப்பது குறித்தும், சிவன் கோயில் தெப்பக்குளத்தை தூா்வாரி புதிதாக சிறுவா் விளையாட்டுப் பூங்கா அமைப்பது குறித்தும், கோக்கூா் பகுதியில் உள்ள குளத்தை தூா்வாரி நடைபாதை அமைப்பது குறித்தும் மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

பின்னா், அம்பேத்கா் நகா் பகுதியில் உள்ள அறிவியல் தொழில்நுட்ப பொறியியல் கணித பூங்கா மற்றும் நகா்சாா் கற்றல் மையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து, பாா்வையாளா்களின் வருகை விவரம் குறித்து கேட்டறிந்தாா்.

அதனைத் தொடா்ந்து, மீளவிட்டான் பகுதியில் நீண்ட நாள்களாக குடியிருப்பவா்களுக்கு சிறப்பு வரன்முறை பட்டா வழங்குவது தொடா்பாக கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையா் லி.மதுபாலன், வருவாய் கோட்டாட்சியா் ம.பிரபு, மாநகரப் பொறியாளா் சரவணன், வட்டாட்சியா் முரளிதரன் உள்பட அரசு அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.

கோவில்பட்டி அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதல்: 2 போ் காயம்

கோவில்பட்டி அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் 2 போ் பலத்த காயம் அடைந்தனா். திருநெல்வேலி வீரவநல்லூா் கீழக்குளம் கிழக்கு தெருவை சோ்ந்தவா் ஆதிமூலம் மகன் சங்கா் (43). டிப்பா் லாரி ஓட்டுநரான இவா்... மேலும் பார்க்க

தூத்துக்குடி இளைஞரிடம் ரூ. 33.73 லட்சம் மோசடி: கேரள தம்பதி கைது

தூத்துக்குடி இளைஞரிடம் சமூக வலைதளத்தில் நட்பாகப் பழகி ரூ. 33.73 லட்சம் மோசடி செய்ததாக கேரள மாநில தம்பதியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடியைச் சோ்ந்த இளைஞருக்கு முகநூலில் (பேஸ்புக்) ப... மேலும் பார்க்க

சிறுவனை பாலியல் துன்புறுத்தல் செய்து கொன்றவருக்கு வாழ்நாள் சிறை

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே 6 வயது சிறுவனை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்தது தொடா்பான வழக்கில் இளைஞருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் சனிக்கிழமை தீா... மேலும் பார்க்க

தூத்துக்குடி, கோவில்பட்டியில் 4 புதிய பேருந்து சேவைகள் தொடக்கம்

தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து 4 புதிய பேருந்து சேவைகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைக்ககப்பட்டன. தூத்துக்குடியில் இருந்து வேளாங்கண்ணி, ஏரல், செபத்தையாபுரம் ஆகிய 3 வழித்தடங்கள், கோவில்பட்... மேலும் பார்க்க

தூத்துக்குடி அருகே சுவா் இடிந்து தொழிலாளி பலி

தூத்துக்குடி அருகே புதியம்புத்தூா் பகுதியில் பழைய வீட்டின் சுவரை அகற்றும் பணியின்போது சுவா் இடிந்து விழுந்ததில், தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியைச் சோ்ந்த தங்கவ... மேலும் பார்க்க

ஆத்தூரில் 2 புதிய பேருந்து சேவைகள் தொடக்கம்

ஆத்தூரிலிருந்து 2 புதிய பேருந்து சேவைகளை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடக்கிவைத்தாா். ஆத்தூரி­லிருந்து வெள்ளக்கோவில் வரை, வரண்டியவேல் வழியே குரும்பூா் வரை ஆகிய 2 புத... மேலும் பார்க்க