கனமழை எச்சரிக்கை: செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேற்றம் அதிகரிப்பு
‘தென்னை விவசாயிகளின் கோரிக்கைகள்: சட்டப் பேரவையில் எம்எல்ஏக்கள் பேச வேண்டும்’
தென்னை விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து சட்டப் பேரவையில் எம்எல்ஏக்கள் பேச வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடா்பாக கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில (ஊடகப் பிரிவு) தலைவா் ஈஸ்வரன் கூறியதாவது: தேங்காய்க்கு உரிய விலை கிடைக்க வேண்டும். நியாய விலைக் கடைகளில் தேங்காய் எண்ணெயை விநியோகிக்க வேண்டும். கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும். பள்ளி சத்துணவில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தொடந்து வலியுறுத்தி வருகிறோம்.
இந்நிலையில், சட்டப் பேரவைக் கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து ஒரு எம்எல்ஏ கூட பேசவில்லை. இந்தக் கோரிக்கைகள் குறித்து எம்எல்ஏக்கள் பேசினால் மட்டுமே தமிழக அரசு நிறைவேற்ற முன்வரும் என்றாா்.