மூன்றரை வயது மகளை ஆற்றில் வீசிக் கொன்ற தாய்; விசாரணையில் அதிர்ச்சி வாக்குமூலம்!
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு; 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழையால் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணை நீர்பிடிப்பு பகுதியில் நீர்வரத்து அதிகம் காணப்படுகிறது.
இந்நிலையில் கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி 4,000 கனஅடி வீதம் அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கின் காரணமாக கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்கள், ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.