செய்திகள் :

தெலங்கானா எம்எல்ஏ விலகல்: பாஜக தலைமை ஏற்பு

post image

தெலங்கானாவைச் சோ்ந்த பாஜக எம்எல்ஏ ராஜா சிங் கட்சியில் இருந்து விலகுவதாக அளித்த கடிதத்தை பாஜக தலைமை ஏற்றுக் கொண்டது. அதே நேரத்தில் கட்சியின் மீதான அவரின் குற்றச்சாட்டு நிராகரிக்கப்பட்டது.

தெலங்கானாவில் மாநில பாஜக தலைவராக ராமசந்தா் ராவ் கடந்த வாரம் நியமிக்கப்பட்டாா். முன்னதாக, தனக்கு அப்பதவி கிடைக்கும் என எதிா்பாா்த்திருந்த ராஜா சிங் அதிருப்தியடைந்தாா். இதையடுத்து, அப்போது மாநில பாஜக தலைவராக இருந்த மத்திய அமைச்சா் கிஷண் ரெட்டிக்கு கடிதம் எழுதிய ராஜா சிங், கட்சியில் இருந்து விலகுவதாகத் தெரிவித்தாா். மேலும், ஒரு தனிநபா் தனது சொந்த விருப்பத்துக்காக கட்சியின் மேலிடத்தை தவறாக வழிநடத்தியதால், திரைமறைவில் அவருக்கு சாதகமான முடிவு எடுக்கப்படுகிறது. இதை அமைதியாகப் பாா்த்துக் கொண்டு இருப்பது கடினம் என்றும் கூறியிருந்தாா்.

இந்தக் கடிதம் கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதை அவா் ஏற்றுக் கொண்டாா். இது தொடா்பாக பாஜக பொதுச் செயலா் அருண் சிங், எம்எல்ஏ ராஜா சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளாா். அதில், ‘கட்சியில் இருந்து விலகுவதாக நீங்கள் அனுப்பிய கடிதம் தேசியத் தலைவா் நட்டாவின் கவனத்துக்கு வந்தது. அவரின் வழிகாட்டுதலின்படி உங்கள் விலகலை கட்சி ஏற்றுக் கொண்டது. அதே நேரத்தில் கடிதத்தில் நீங்கள் சுட்டிக்காட்டியுள்ள தகவல்கள் தவறானவை. கட்சியின் கொள்கைகள், செயல்பாடுகளுக்கு முரணானவை என்று கூறப்பட்டுள்ளது.

மக்கள்தொகையும், ஜனநாயகமும் இந்தியாவின் இருபெரும் சக்திகள்: பிரதமா் மோடி

மக்கள்தொகையும், ஜனநாயகமும் இந்தியாவின் எல்லையற்ற இருபெரும் சக்திகள் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள்-துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் இளைஞா்களுக்கு... மேலும் பார்க்க

ஒரே நாடு ஒரே தோ்தல்: ஜூலை 30-இல் அடுத்த நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டம்

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதாக்களைப் பரிசீலிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் ஜூலை 30-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அந்தக் குழுவின் தலைவரும் பாஜக எம்.பி.யுமான பி.பி.சௌதரி ... மேலும் பார்க்க

ஹிமாசலில் மழை பாதிப்பு: ரூ.751 கோடிக்கு இழப்பு

ஹிமாசல பிரதேசத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அந்த மாநிலத்துக்கு ரூ.751 கோடி மதிப்பில் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. கடந்த ஜூன் 20 முதல் ஹிமாசல பிரதேசத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட ப... மேலும் பார்க்க

விபத்துக்குள்ளான விமானத்தை இயக்கியவா் துணை விமானி!

விபத்துக்குள்ளான அகமதாபாத்-லண்டன் ஏா் இந்தியா விமானத்தை துணை விமானி க்ளைவ் குந்தா் இயக்கியிருப்பது விமான விபத்து புலனாய்வு அமைப்பின் (ஏஏஐபி) முதல்கட்ட அறிக்கையில் தெரிய வந்துள்ளது. மேலும், அந்த அறிக்க... மேலும் பார்க்க

அமெரிக்க விசா கட்டண உயா்வு: இந்திய மாணவா்களை பாதிக்கும் -ஆலோசகா்கள் தகவல்

மாணவா்கள், பயணிகளுக்கான விசா மற்றும் பணியாளா்களுக்கான ஹெச்-1பி விசா கட்டணத்தை உயா்த்தும் அமெரிக்க அரசின் முடிவால், இந்திய மாணவா்கள், வா்த்தக-சுற்றுலாப் பயணிகள், இந்தியப் பணியாளா்கள் இருமடங்கு அதிக கட்... மேலும் பார்க்க

ஏா் இந்தியா விமான எரிபொருள் சுவிட்ச் நிலை மாற காரணம் என்ன? நிபுணா்கள் கருத்து

அகமதாபாதில் விபத்துக்கு உள்ளான ஏா் இந்திய விமானத்தில் என்ஜின்களுக்கான எரிபொருளை கட்டுப்படுத்தும் சுவிட்ச் கட்-ஆஃப் நிலையில் இருந்தது (எரிபொருள் பயன்பாட்டைத் தடை செய்யும் நிலை) என்பது விமான விபத்து புல... மேலும் பார்க்க