செய்திகள் :

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: மோடியை சந்திக்க நேரம் கேட்டு ஸ்டாலின் கடிதம்

post image

சென்னை: தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழக எம்.பி.க்களுடன் பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்க நேரம் கேட்டு தமிழக அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடா்பாக கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி பேரவையில் ஒருமனதாகத் தீா்மானத்தை நிறைவேற்றப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய அனைத்துக் கட்சிகளின் தலைவா்கள் கூட்டம் கடந்த மாா்ச் 5-இல் நடத்தப்பட்டது.

தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக நமது நியாயமான கோரிக்கைகளையும், அவைசாா்ந்த போராட்டத்தையும் முன்னெடுத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டு, இதற்காக கூட்டு நடவடிக்கைக் குழு ஏற்படுத்தவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கான முன்னெடுப்பு நடவடிக்கையாக, கூட்டு நடவடிக்கைக் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் கடந்த மார்ச் 22-ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கேரளம், தெலங்கானா, பஞ்சாப் மாநில முதல்வா்கள், கா்நாடக மாநில துணை முதல்வா் உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் தலைவா்கள் நேரில் பங்கேற்றனா்.

விரிவான ஆலோசனைக்குப் பிறகு, மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பானது மாநிலங்களுடன் கலந்தாலோசித்து வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற வேண்டும்; 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட வேண்டும்; மக்கள்தொகை கட்டுப்பாட்டுத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது; உரிய அரசியல் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்; கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகளின் மாநில சட்டப்பேரவைகளில் இதுகுறித்த தீா்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போது பிரதமரிடம் கூட்டு நடவடிக்கைக் குழுவின் சாா்பாக கடிதம் அளித்து முறையிடவும் முடிவு செய்யப்பட்டது.

‘தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’ என்ற முழக்கத்தை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் சென்று நமது உரிமைகளை மீட்டெடுக்கத் தீா்மானிக்கப்பட்டது. அந்த வகையில், தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் நியாயமான மறுசீரமைப்பைப் பெற, தமிழ்நாட்டில் இருந்து நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளின் எம்.பி.க்களை அழைத்துச் சென்று பிரதமா் நரேந்திர மோடியைச் சந்திக்கவிருக்கிறோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேரவையில் தெரிவித்திருந்தார்.

டிஆா்பி ஆண்டு அட்டவணை வெளியீடு: ஆகஸ்டில் முதுநிலை ஆசிரியா் தோ்வு

இந்த நிலையில், தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறையும் வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது. அதனால், பாதிக்கப்படும் மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுத்திட நியாயமான தொகுதி மறுசீரமைப்பைப் பெற்றிட தமிழக எம்.பி.க்களுடன் பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்க நேரம் கேட்டு தமிழக அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில், தற்போதுள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப நாடாளுமன்றத் தொகுதிகள் சீரமைக்கப்பட்டால், தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களில் தொகுதி எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளதால், 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுசீரமைப்பு செய்வதை தள்ளி வைக்க வேண்டும் என்றும், தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்த எங்களின் கவலைகள் மற்றும் கருத்துகளை மனுவாக அளிக்க வேண்டும்.

மேலும், சென்னையில் நடைபெற்ற நியாயமான தொகுதி மறுசீரமைப்பு நிர்ணயத்திற்கான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தின் தீர்மானங்களை தமிழகத்தின் பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்களுடன் சேர்ந்து, உங்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த வேண்டும்.

முன்னர் குறிப்பிட்டது போல, நாட்டின் கூட்டாட்சிக்கும், தமிழ்நாட்டின் உரிமைக்கும் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரால் ஏற்பட்டிருக்கும் பேராபத்தை எதிர்த்து ஒற்றை நோக்கத்தோடு கட்சி, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் எங்களின் ஒன்றுபட்ட நிலைப்பாட்டை தெரிவிக்க நாங்கள் அவசரமாக உங்களை சந்தித்து ஆலோசனை நடத்த நேரம் கோருகிறோம். உங்கள் விரைவான பதிலுக்காகக் காத்திருக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.

சிரியா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்! 9 பேர் பலி!

சிரியா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சிரியாவின் தென்மேற்கு பகுதிகளின் மீது நேற்று (ஏப்.2) இரவு இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டத... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட்: பிகார் அரசினால் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல் கைது!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூ.1 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த நக்சல் ஒருவர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பலாமு மாவட்டத்தின் துரிக்தார் மலைப்பகுதியில் மாவோயிஸ்டு அமைப்பின் க... மேலும் பார்க்க

கிரீஸ் அகதிகள் படகு விபத்து: 2 குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!

கிரீஸ் நாட்டின் லெஸ்போஸ் தீவின் அருகில் அகதிகள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியாகியுள்ளனர். கிரீஸ் நாட்டின் கிழக்குப் பகுதியிலுள்ள லெஸ்போஸ் தீவை நோக்கி ஏகன் ... மேலும் பார்க்க

இலங்கை: பிரதமர் மோடியின் வருகையால் தெரு நாய்களைப் பிடிக்கும் அரசு! மக்கள் போராட்டம்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு இலங்கையிலுள்ள தெரு நாய்களைப் பிடிக்கும் அரசின் திட்டத்திற்கு எதிராக அந்நாட்டு மக்களும் ஆர்வலர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்தியப் பிரதமர் ... மேலும் பார்க்க

பலூசிஸ்தானில் இணைய சேவை முடக்கம்!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் பல்வேறு மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. பலூசிஸ்தானில் அரசுக்கு எதிராக மக்கள் போராடி வரும் நிலையில், அம்மாகாணத்தின் தலைநகர் குவேட்டா உள்ளிட்ட முக்கிய நக... மேலும் பார்க்க

ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாள் விடுமுறை?

நாட்டில் உள்ள வங்கிகள் 2025 ஏப்ரல் மாதத்தில் 16 நாள்கள் விடுமுறை வருகிறது. இதில் பல்வேறு பண்டிகைகள், உள்ளூர் விழா விடுமுறை மற்றும் பொது விடுமுறை, இரண்டாவது மற்றும் நான்காவது சனி மற்றும் கட்டாய வாராந்த... மேலும் பார்க்க