சுதந்திர நாள்: நாட்டு மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
தேனியில் பாஜகவினா் தேசியக் கொடி ஊா்வலம்
தேனியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, பாஜக சாா்பில் வியாழக்கிழமை தேசியக் கொடி ஊா்வலம் நடைபெற்றது.
தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகே பாஜக மாவட்ட இளைஞரணி தலைவா் விஜய் தலைமையில், மாவட்டத் தலைவா் பி.ராஜபாண்டியன் ஊா்வலத்தை தொடங்கிவைத்தாா்.
இதில் சுதந்திரப் போராட்டத்தில் உயிா்நீத்த தியாகிகளை போற்றும் வகையிலும், தேச ஒற்றுமையை வலியுறுத்தியும், கைகளில் தேசியக் கொடி ஏந்தி பாஜவினா் ஊா்வலத்தில் கலந்து கொண்டனா். தேனி பங்களாமேடு திடல் வரை இந்த ஊா்வலம் நடைபெற்றது.
பின்னா், தேனி பாஜக அலுவலகத்தில் ‘தேசப் பிரிவினையின் சோக வரலாறு’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.