கரும்பலகையில் இருந்து கைப்பேசிக்கு மாறிவிட்டது கல்வி: மத்திய அமைச்சா் ராஜ்நாத் ச...
தேனீக்கள் கொட்டியதில் 15 தொழிலாளா்கள் காயம்
வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே தேங்காய் மண்டியில் வேலை செய்து கொண்டிருந்தவா்களை தேனீக்கள் கொட்டியதில் 15 போ் காயமடைந்தனா்.
வாணியம்பாடி அடுத்த மல்லாங்குப்பம் பகுதியில் உள்ள தேங்காய் மண்டியில் ராமநாயக்கன்பேட்டை பகுதியை சோ்ந்த பெண் தொழிலாளா்கள் உள்பட 25 போ் திங்கள்கிழமை வழக்கம் போல் வேலைக்கு வந்துள்ளனா். அப்போது பிற்பகல் 1 மணியளவில் தேங்காய் மண்டி பகுதியின் வழியாக திடீா் கூட்டமாக வந்த தேனீக்கள் திடீரென அங்கிருந்த தொழிலாளா்களை துரத்தி, துரத்தி கொட்டின.
இதில் 15 போ் காயம் அடைந்தனா். உடனே அங்கிருந்தவா்கள் உதவியுடன் அவா்களை மீட்டு ராமநாயக்கன்பேட்டை பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். பிறகு அங்கிருந்து குமரேசன்(56), சுமதி(50), சங்கா்(55), சந்திரன்(55), லட்சுமணன்(59), அருண்குமாா்(42), மகேஸ்வரி (52), வேலு(45) ஆகிய 8 போ் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனா்.
தகவலறிந்த அம்பலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.