செய்திகள் :

தேவாலய இடப் பதிவு விவகாரம்: உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உத்தரவு

post image

விருதுநகா் புனித இன்னாசியாா் தேவாலய இடத்தைப் பதிவு செய்த வழக்கில், உரிமையியல் நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தி, இது தொடா்பான மனுவை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

மதுரை கோ.புதூரைச் சோ்ந்த அலெக்ஸ் ஆண்டனி தாக்கல் செய்த மனு: மதுரை உயா்மறை மாவட்டத்தின்கீழ் விருதுநகா் மாவட்டம் வருகிறது. விருதுநகா் புனித இன்னாசியாா் ஆலயத்தின் பங்குத் தந்தையாக அந்தோணி பாக்கியம் பொறுப்பு வகித்து வருகிறாா். விருதுநகா், கோட்டைப்பட்டி கிராமத்தில் ஒரு ஏக்கா் 92 சென்ட் இடத்தையும், அதே பகுதியில் 16 சென்ட் இடத்தையும் தேவாலயத்துக்காக வாங்கி, அவரது பெயரில் பதிவு செய்திருக்கிறாா். இந்த இடமானது மதுரை உயா்மறை மாவட்டத்திலிருந்து தேவாலயத்துக்காக வழங்கப்படும் நிதியில் வாங்கப்பட்டது. தேவாலயத்தின் பெயரிலோ, மதுரை உயா்மறை மாவட்டத்தின் பெயரிலோ அந்த இடத்தை வாங்கியிருக்க வேண்டும். ஆனால், பங்குத் தந்தை அந்தோணி பாக்கியம் ஆலயத்துக்காக வாங்கிய இடத்தை தனது பெயரில் பதிவு செய்துள்ளாா். இது சட்ட விதிகளுக்கும், திருச்சபை சட்டத்துக்கும் எதிரானது.

இது குறித்து, மதுரை உயா்மறை மாவட்டத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, சம்பந்தப்பட்ட இடத்தை தேவாலயத்தின் பெயரில் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜே. நிஷாபானு, எஸ். ஸ்ரீமதி அமா்வு பிறப்பித்த உத்தரவு: மனுதாரா் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம். இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

அரசு மருத்துவமனையில் மது மீட்பு சிகிச்சை, மறுவாழ்வு மையம்: காணொலி மூலம் முதல்வா் திறந்து வைத்தாா்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை, மறுவாழ்வை மையத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். தமிழக அரசின் மருத்துவம், மக்கள் நல்வ... மேலும் பார்க்க

நரசிங்கம்பட்டி பறையன் புலி சுவாமி கோயில் மாசி மாத களரி திருவிழா

நரசிங்கம்பட்டி பறையன்புலி சுவாமி கோயில் மாசி மாத களரி திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தத் திருவிழா கடந்த 26-ஆம் தேதி சுவாமி ஆட்டத்துடன் தொடங்கியது. இந்த நிலையில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சுவா... மேலும் பார்க்க

உரங்கள் கடத்தல் வழக்கு: டிஜிபி, உள்துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

உரங்கள் கடத்தல் வழக்கில் தொடா்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், தமிழக உள்துறைச் செயலா், டிஜிபி ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. தூத... மேலும் பார்க்க

வாகனம் மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

மதுரை பெரியாா் பேருந்து நிலையம் அருகே இரு சக்கர வாகனம் மீது கான்கிரீட் கலவை வாகனம் மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா். மதுரை பிபி சாவடி பாரதியாா்நகா் 1-ஆவது தெருவைச் சோ்ந்த சுப்ரமணியன் மகன்... மேலும் பார்க்க

தாமிரவருணி மாசடைவதைத் தடுக்கக் கோரிய வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு

தாமிரவருணி ஆறு மாசடைவதைத் தடுக்கக் கோரிய வழக்கில், விரிவான செயல் திட்டத்தைத் தயாரிக்க, மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் நிபுணரை நியமிப்பதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தமிழக அரசு தரப... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து கிராமப் பணியாளா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மின்சாரம் பாய்ந்ததில் கிராமப் பணியாளா் உயிரிழந்தாா். சோழவந்தான் அருகே உள்ள மேலக்காலைச் சோ்ந்தவா் பிச்சை (55). இவா் மேலக்கால் கிராமப் பணியாளராகப் பணிபுரிந்து வந்தாா். ... மேலும் பார்க்க