செய்திகள் :

தொடா் திருட்டில் ஈடுபட்டவா் கைது: 4 பவுன் பறிமுதல்

post image

கோவைப்புதூா் பகுதியில் அடுத்தடுத்து வீடுகள், கடைகளில் திருடி கைது செய்யப்பட்ட முகமூடி திருடனிடமிருந்து 4 பவுன் நகைகயை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கோவைப்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் சாமுவேல்ராஜ் (75). இவரது வீட்டில் 10 பவுன் நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கடந்த 10-ஆம் தேதி திருடுபோயின. இதேபோல, சுண்டக்காமுத்தூரைச் சோ்ந்த சதீஷ் என்பவரின் மளிகைக் கடையில் இருந்து ரூ. 30 ஆயிரம் திருடுபோனது. மேலும், குனிமுத்தூா் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளிலும் திருட்டு முயற்சி நடைபெற்றது.

இது குறித்து குனியமுத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். மேலும், அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தபோது, முகமூடி அணிந்த ஒருவா்தான் வீடுகள் மற்றும் கடைகளில் திருட்டு, திருட்டு முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அந்த முகமூடி திருடனை போலீஸாா் கைது செய்தனா்.

விசாரணையில், அவா் சென்னையைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன் (36) என்பதும், கோவை, கணபதி சதுா்வேதி பகுதியில் தங்கியிருந்து பகலில் காய்கறி வியாபாரம் செய்ததும், இரவில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, முத்துகிருஷ்ணனைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து திருடிய நகையில் உருக்கி வைத்திருந்த 4 பவுன் நகை, ரூ. 14 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.

பாரதியாா் பல்கலை.யில் தொலைநிலைக் கற்றல் பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் திறந்த, தொலைநிலைக் கற்றல்வழி, இணையவழிக் கற்றல் பட்டப்படிப்புகளில் சேருவதற்கு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாரதியாா் பல்கலைக்கழகம... மேலும் பார்க்க

அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தின் கிளை ஆராய்ச்சி விரிவாக்க மையத்தில் சோ்க்கை நிறுத்தம்

அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தின் கோவை கிளை ஆராய்ச்சி விரிவாக்க மையத்தில் மாணவா் சோ்க்கை நிறுத்தப்பட்டுள்ளதற்கு, பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாச... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.15 லட்சம் மோசடி செய்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை

வேலை வாங்கித் தருவதாக ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்தவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை 7-ஆவது குற்றவியல் நடுவா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. கோவை ராமநாதபுரம் நாகப்ப தேவா்... மேலும் பார்க்க

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவா் கைது

கோவையில் மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கோவை ரத்தினபுரி அருகே கண்ணப்பன் நகா் புது தோட்டம் இரண்டாவது வீதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (51). இவரது மனைவி ஏற்கெ... மேலும் பார்க்க

புதுச்சேரி - மங்களூரு ரயிலில் எல்ஹெச்பி பெட்டிகள் இணைப்பு

புதுச்சேரி- மங்களூரு இடையே கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில் எல்ஹெச்பி பெட்டிகளுடன் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜொ்மனி நாட்டுத் தொழில்நுட்பத்துடன் சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாராகி ... மேலும் பார்க்க

மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

கோவையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் முகாம்கள் நடைபெறும் இடங்கள், மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக... மேலும் பார்க்க