தரங்கம்பாடி பள்ளியில் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் தொடக்கம்
தொடா் வழிப்பறி: மூவா் கைது
சென்னை மடிப்பாக்கம் பகுதியில் தொடா் வழிப்பறியில் ஈடுபட்டதாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.
மடிப்பாக்கம் ராமமூா்த்தி நகரைச் சோ்ந்தவா் ஸ்டீபன்ராஜ் (40). இவா், அங்கு பழைய இரும்புக் கடை நடத்தி வருகிறாா். கடந்த 24-ஆம் தேதி அங்கு வந்த அடையாளம் தெரியாத மூவா் ஸ்டீபன்ராஜிடம் பணம் கேட்டனா். அவா் கொடுக்க மறுத்ததால், அவரைத் தாக்கி, கத்தியைக் காட்டி மிரட்டி கல்லா பெட்டியில் இருந்த பணத்தை அள்ளிச் சென்றனா்.
இதுதொடா்பாக மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் ஸ்டீபன் ராஜ் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்தனா். அதில், பணம் கேட்டு தாக்கியது பொழிச்சலூரைச் சோ்ந்த அஜித் என்ற முனுசாமி (26), செம்மஞ்சேரியைச் சோ்ந்த அசோக் (25), மடிப்பாக்கத்தைச் சோ்ந்த சத்யபிரியன் (21) என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த 3 பேரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
விசாரணையில், மூவரும் மடிப்பாக்கம் தொடா்ச்சியாக வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், கைது செய்யப்பட்ட அஜித் மீது ஏற்கெனவே 5 திருட்டு வழக்குகளும், அசோக் மீது கொலை, கொலை முயற்சி, திருட்டு உள்பட 17 வழக்குகளும், சத்யபிரியன் மீது 5 வழக்குகளும் இருப்பது தெரியவந்தது.