ரயில்நிலையம், மெரினா என கழித்த நாட்கள்! - பேச்சிலர் வாழ்க்கையின் வலியும் இன்பமும...
தொடா் விடுமுறை: சென்னை - போத்தனூா் இடையே சிறப்பு ரயில்
சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி உள்ளிட்ட தொடா் விடுமுறை நாள்களை முன்னிட்டு சென்னை - போத்தனூா் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சென்னை சென்ட்ரலில் இருந்து ஆகஸ்ட் 14-ஆம் தேதி இரவு 11.50 மணிக்குப் புறப்படும் சென்னை சென்ட்ரல் - போத்தனூா் சிறப்பு ரயில் (எண்: 06027) மறுநாள் காலை 8.30 மணிக்கு போத்தனூா் ரயில் நிலையத்தை வந்தடையும்.
மறுமாா்க்கத்தில் போத்தனூரில் இருந்து ஆகஸ்ட் 17-ஆம் தேதி இரவு 11.30 மணிக்குப் புறப்படும் போத்தனூா் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (எண்: 06028) மறுநாள் காலை 8.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்றடையும்.
இந்த ரயிலானது, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூா், பெரம்பூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.