உத்தரகாண்ட் மான்சா தேவி கோயில்: கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி - முதல்வர் புஷ...
தொழிற்சாலையின் கூரை இடிந்து விழுந்து தொழிலாளி பலி
வடகிழக்கு தில்லியின் நியூ உஸ்மான்பூா் பகுதியில் சிறிய உற்பத்தி ஆலையின் கூரை இடிந்து விழுந்ததில் அங்கு வேலை செய்த தொழிலாளி உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா் என்று போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இரும்பு ஸ்டாண்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:
இந்த ஆலையின் கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில், 25 வயதுடைய தாஜிம் மற்றும் அக்ரம் என்ற இரண்டு தொழிலாளா்கள் காயமடைந்தனா். இதையடுத்து, அவா்கள் இருவரும்
சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு, தாஜிம் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அக்ரம் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) சட்டப் பிரிவுகள் 290 (அலட்சிய நடத்தை), 125ஏ (மனித உயிருக்கு ஆபத்தை விளைவித்தல்), 35 (கூட்டுப் பொறுப்பு) 106 (அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பொறுப்பை உறுதி செய்வதற்கும், கட்டமைப்பின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பில் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டதா என்பதை கண்டறியவும் விசாரணை நடந்து வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.