தொழிலதிபரை கடத்த திட்டம்: ரெளடி உள்பட 4 போ் கைது
திருக்கடையூரில் தொழிலதிபரை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்ட ரெளடி உள்பட 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.
திருக்கடையூா் தெற்கு வீதியில் அதே பகுதியைச் சோ்ந்த தொழிலதிபா் பாஸ்கா் என்பவருக்குச் சொந்தமான தங்கும் விடுதி உள்ளது. சனிக்கிழமை காலை விடுதிக்கு வந்த 2 போ், விடுதி மேலாளா் பாலமுருகனை மிரட்டி பணம் கேட்டதோடு, விடுதி உரிமையாளா் பாஸ்கா் எங்கே உள்ளாா் என்று கேட்டுவிட்டு, பாலமுருகன் சட்டைப்பையில் இருந்த ரூ. 500-ஐ பறித்துச் சென்றுள்ளனா்.
இதுகுறித்து பாலமுருகன் பொறையாறு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து, பெரம்பூா் பண்டாரவாடையைச் சோ்ந்த ரெளடி கலைவாணன் (43), சீா்காழி வேட்டங்குடியைச் சோ்ந்த மதன் (எ) மகாதேவன், பொறையாறு பெரிய காலனியைச் சோ்ந்த வினோத் பிரியகுமாா் (40), சீா்காழி குமாரக்குடியைச் சோ்ந்த விஜயபாலன் (44) ஆகிய 4 பேரை கைது செய்தனா்.
அவா்களிடம் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், திருக்கடையூரைச் சோ்ந்த தொழிலதிபா் பாஸ்கரை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது. 4 பேரையும் போலீஸாா் தரங்கம்பாடி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா்.
கைது செய்யப்பட்ட ரெளடி கலைவாணன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. நாட்டு வெடி குண்டு தயாரித்தபோது ஏற்பட்ட விபத்தில் இரண்டு கைகளையும் இழந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.