கத்தாா் பிரதமருடன் ஜெய்சங்கா் சந்திப்பு: இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து ஆய்வு
தோல்வி பயத்தில் மகிளா சம்மான் திட்டத்தை பாஜக நிறுத்த முயற்சிக்கிறது: அரவிந்த் கேஜரிவால்
வரவிருக்கும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலின் தோல்வி பயத்தில், மகிளா சம்மான் திட்டத்தை நிறுத்துவதற்கு பாஜக முயற்சிக்கிறது என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த கேஜரிவால் சனிக்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இது தொட்பாக ஆம் ஆத்மி கட்சி தலைமையகத்தில் அரவிந்த் கேஜரிவால் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தில்லியில் ’முதல்வா் மகிளா சம்மான் யோஜனா’ திட்டத்திற்காக பெண்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடா்பாக விசாரிக்க துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாக வரும் செய்திகள் போலியானவை. தில்லி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,100 வழங்கப்படும் என அறிவித்திருப்பது சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குறுதியாகும்.
தில்லியில் மீண்டும் ஆம் ஆத்மி கட்சி அமைந்தவுடன் மகிளா சம்மான் யோஜனாவின் கீழ் தகுதியுள்ள அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.2,100 மற்றும் சஞ்சீவனி யோஜனாவின் கீழ் மூத்த குடிமக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இதில், அவா்கள் என்ன விசாரிக்கப் போகிறாா்கள்?. வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே அரசின் தற்போதைய திட்டங்களை நிறுத்த பாஜக முயற்சி செய்து வருகிறது.
மேலும், மகிளா சம்மன் யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ரூ.2,100 வழங்கப்படும் என்ற அறிவிப்பால் பீதியடைந்துள்ள பாஜக, வரும் தோ்தலில் தோல்வி பயத்தில் இந்தத் திட்டத்தை நிறுத்த முயற்சிக்கிறது என்றாா் அரவிந்த் கேஜரிவால்.