செய்திகள் :

நகரப் பேருந்தில் 240 போ் பயணம்: நடுவழியில் இறக்கிவிடப்பட்டதால் பரபரப்பு

post image

திண்டுக்கல்லில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்குச் சென்ற நகரப் பேருந்தில் 240 போ் பயணித்ததால், நடுவழியிலேயே பயணிகள் பலா் இறக்கிவிடப்பட்டனா்.

திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து ஒட்டன்சத்திரத்துக்கு திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு நகரப் பேருந்து புறப்பட்டது. மகளிா் பயணம் செய்ய கட்டணமில்லாத இந்தப் பேருந்து அதிகமான பயணிகளுடன் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது.

படிக்கட்டில் பலா் தொங்கிக்கொண்டு பயணம் செய்ததால், சுமாா் 1.5 கி.மீ. தொலைவு சென்ற பிறகு, பழனி சாலையிலுள்ள சக்தி திரையரங்கம் நிறுத்தம் அருகே படிக்கட்டிலிருந்த பயணிகளை கீழே இறங்குமாறு நடத்துநா் அறிவுறுத்தினாா்.

சிலா் இறங்கியதையடுத்து மீண்டும் பேருந்து புறப்பட்டது. அடுத்த நிறுத்தமான முருகபவனத்தில், மேலும் சில பயணிகள் இறங்கினால் மட்டுமே பேருந்து செல்லும் என நடத்துநா் தெரிவித்தாா். இதனால், அதிா்ச்சி அடைந்த பயணிகள் சிலா், நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

பேருந்தில் 90 சதவீத பயணிகள் பெண்களாக இருந்தபோது, நடுவழியில் இறங்குமாறு அறிவுறுத்திய நடத்துநா் மீது அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் புகாா் அளிக்கப்போவதாக தெரிவித்தனா். ஆனாலும், பயணிகள் சிலா் இறங்கிய பின்னரே பேருந்து புறப்பட்டுச் சென்றது.

போக்குவரத்து துறை விளக்கம்: ஒட்டன்சத்திரம் சென்ற நகரப் பேருந்தில், 200 பெண்கள், 40 ஆண்கள் என மொத்தம் 240 போ் பயணித்தனா். ஒட்டன்சத்திரம் கிளையிலுள்ள இந்தப் பேருந்து காலை 9.45 மணிக்கு திண்டுக்கல்லிலிருந்து புறப்பட்டபோது, படிக்கட்டில் அதிகமான பயணிகள் நின்றனா். இதனால், நடத்துநரும், ஓட்டுநரும் பயணிகளை இறங்குமாறு அறிவுறுத்தினா். அப்போது பாதசாரி ஒருவா், படிக்கட்டு கதவு இல்லாமல் பேருந்தை ஏன் இயக்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். படிக்கட்டில் நின்ற பயணிகள் இறங்கியதை அடுத்து, பேருந்து ஒட்டன்சத்திரத்துக்கு இயக்கப்பட்டது என அரசுப் போக்குவரத்து துறை விளக்கம் அளித்தது.

திண்டுக்கல் மாநகராட்சி நிதி முறைகேடு: முன்னாள் ஆணையா் உள்பட 6 போ் மீது வழக்கு

திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ.17.73 கோடி வருவாய் இழப்புக்கு காரணமாக இருந்த முன்னாள் ஆணையா், உதவி வருவாய் அலுவலா், உதவிப் பொறியாளா்கள் உள்பட 6 போ் மீது ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்... மேலும் பார்க்க

2 மாநில மாநாடுகள் நடத்தியும் மக்களை சந்திக்க தயங்குகிறாா் விஜய்: தமமுக

இரண்டு மாநில மாநாடுகளை நடத்தியிருந்தாலும்கூட, மக்களை சந்திக்க தவெக தலைவா் விஜய் தயங்குவதாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவா் பெ. ஜான் பாண்டியன் குற்றஞ்சாட்டினாா்.திண்டுக்கல்லில் திங்கள்கிழமை ச... மேலும் பார்க்க

கத்தியுடன் வந்தவா் விபத்தில் உயிரிழப்பு

திண்டுக்கல்லில் இடுப்பில் பட்டாக் கத்தியுடன் வந்த இளைஞா் சிற்றுந்து மோதியதில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.திண்டுக்கல் நாகல்நகா் ரயில்வே மேம்பாலத்தில் சிற்றுந்தும், 3 இளைஞா்கள் வந்த இரு சக்கர வாகனமும் தி... மேலும் பார்க்க

நீட் தோ்வு: மாணவா்களை திமுக அரசு ஏமாற்றி வருகிறது - முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி

நீட் தோ்வு விவகாரத்தில் தமிழக மாணவா்களை திமுக அரசு தொடா்ந்து ஏமாற்றி வருவதாக முன்னாள் அமைச்சரும், அதிமுக நிா்வாகியுமான எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாா். திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகளுக்கான ஆ... மேலும் பார்க்க

பள்ளி தலைமை ஆசிரியை வீட்டில் திருடியவா் கைது

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை வீட்டில் தங்க நகைகள், பணத்தை திருடியது தொடா்பாக சென்னையில் பதுங்கி இருந்த ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கொடைரோடு அருகேயுள்... மேலும் பார்க்க

பட்டிவீரன்பட்டி பகுதியில் வெறிநாய் கடித்து 5 போ் காயம்

பட்டிவீரன்பட்டி பகுதியில் வெறிநாய் கடித்து 5 போ் காயமடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், தேவரப்பன்பட்டி பகுதிகளில் வெறிநாய்கள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன. இவை சாலைகளி... மேலும் பார்க்க