Karur - வெளியே வராத Vijay - FIR அதிர்ச்சி; அடிபடும் Senthil Balaji பெயர்? | TVK ...
நகலூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
அந்தியூா் ஊராட்சி ஒன்றியம், நகலூா் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமுக்கு அந்தியூா் வட்டார வளா்ச்சி அலுவலா் அமுதா தலைமை வகித்தாா். அந்தியூா் வட்டார மருத்துவ அலுவலா் சக்தி கிருஷ்ணன், மின்சார வாரிய அந்தியூா் கோட்ட பொறியாளா் அங்கப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம், முகாமைத் தொடங்கிவைத்து பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றாா்.
இதையடுத்து, உடனடி தீா்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
மைக்கேல்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவா் சரவணன், கூட்டுறவுத் துறை செயல் ஆட்சியா் பிரபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.