ரூ.6.77 கோடியில் ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் புதுப்பிப்பு: காணொலி காட்சி மூலம் பிர...
நடிகை ஹிமா பிந்துவின் புதிய தொடர்!
நடிகை ஹிமா பிந்து நடிக்கவுள்ள புதிய தொடர் குறித்த தகவல் தெரியவந்துள்ளது.
சின்ன திரையில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இளைய தலைமுறையினரையும் தொடர்கள் கவர்ந்துள்ளது.
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற 'இதயத்தை திருடாதே' தொடரில் நடித்ததன் மூலம் சின்ன திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஹிமா பிந்து.
இதைத் தொடர்ந்து, இலக்கியா தொடரில் சஹானா பாத்திரத்தில் நடித்து வந்த இவர், இத்தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
தொடரில் இருந்து விலகினாலும் சமூக வலைதளத்தில் சுறுசுறுப்பாக இயங்கி வரும் இவருக்கு தனி ரசிகர்கள் உள்ளனர். இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இலக்கியா தொடரிலிந்து விலகிய ஹிமா பிந்து, எந்த ஒரு தொடரிலும் ஒப்பந்தம் ஆகாமல் இருந்த நிலையில், இரு மலர்கள் என்ற புதிய தொடரில் நடிகை ஹிமா பிந்து நடிக்கவுள்ளார்.
மேலும் இத்தொடரின் பிரதான பாத்திரத்தில் ஜீவிதா, சந்தோஷ் ஆகியோர் நடிக்கவுள்ளனர். மேலும் இத்தொடர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீண்ட நாள்களுக்குப் பிறகு தொடரில் நடிக்கவுள்ள ஹிமா பிந்துவுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: 500 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகும் சிங்கப் பெண்ணே தொடர்!