எழுத்தாளா்களுக்கு மிகப்பெரிய உந்து சக்தி கலாப்ரியா: தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்...
நடிப்பிற்காக உடல் எடையைக் குறைக்கும் லோகேஷ் கனகராஜ்!
நாயகனாக நடிக்கவுள்ள லோகேஷ் கனகராஜ் உடல் எடையைக் குறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இப்படத்தின் டிரைலர் ஆக. 2 ஆம் தேதி வெளியாகவுள்ளதால் அன்றிலிருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துவிடும் என்பதால் பல திரையரங்க உரிமையாளர்கள் படத்தை வெளியிட முனைப்பு காட்டியுள்ளனர்.
கூலி படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கைதி - 2 படத்தை இயக்குகிறார்.
இதற்கிடையே, இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் நாயகனாகவும் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.
இந்த நிலையில், இப்படத்திற்காக 2 மாதம் தற்காப்புக் கலை பயின்றதைக் குறிப்பிட்ட லோகேஷ் கனகராஜ், தன் உடல் எடையையும் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான உணவுக் கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இப்படம் முழுமையான கேங்ஸ்டர் படமாக உருவாகிறது.
இதையும் படிக்க: சிவகார்த்திகேயனின் அடுத்த பட இயக்குநர் இவர்தான்!