செய்திகள் :

நம்பிக்கையுடன் இருக்கிறேன்: இஸ்ரேல் - காஸா போர் நிறுத்தம் தொடர்பாக டிரம்ப் கருத்து!

post image

இஸ்ரேல் - காஸா இடையிலான போர் நிறுத்த விவகாரத்தில் முடிவு எட்டப்படும் என்பதைக் குறிப்பிடும் வகையில் பேச்சுவார்த்தையில் நம்பிக்கையுடன் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

காஸா போர் நிறுத்தம் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடன் அதிபர் டிரம்ப் இன்று 6வது முறையாக பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். இதற்காக அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு நெதன்யாகு வருகைப்புரிந்துள்ளார்.

இது இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை எனக் கூறப்படும் நிலையில், இதில் போர் நிறுத்தம் தொடர்பாக முடிவு எட்டப்படும் என்ற நம்ப்பிக்கை உள்ளதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் - காஸா இடையே கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. பாலஸ்தீன ஆதரவு பெற்ற ஹமாஸ் படையினரை காஸாவில் இருந்து முற்றிலுமாக அழிக்கும் நோக்கத்தில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த நிலையில், லட்சக்கணக்கான மக்கள் உடமைகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.

மனிதாபிமானமற்ற முறையில் முகாம்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் தற்போது வரை உலக நாடுகளிடையே 7 போரை நிறுத்தியுள்ளதாகக் கூறும் அதிபர் டிரம்ப், இஸ்ரேல் - காஸா இடையிலான போர் நிறுத்தம் தொடர்பாகவும் பேச்சுவார்த்தைக்கு ஆர்வம் காட்டி வருகிறார்.

அமெரிக்கா தரப்பில் இருந்து பேச்சுவார்த்தைக்கு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடன் அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.

இதற்காக வெள்ளை மாளிகைக்கு வருகைப்புரிந்துள்ள நெதன்யாகுவை கைகுலுக்கி வரவேற்று, அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க | வெளிநாட்டில் தயாரிக்கப்படும் படங்களுக்கு 100% வரி - டிரம்ப் அறிவிப்பு

Thumbs up and handshake: Trump, Netanyahu meet at White House amid Gaza peace push

பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டம்: 2 பேர் பலி, 22 பேர் படுகாயம்

பாகிஸ்தான் அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் இருவர் உயிரிழந்தனர். 22 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கடந்த வாரம் பொதுமக்கள் வாழும் இடங்களில் மறைந்துள்ள பயங்கரவாதிகளைக் கொல்லும் நோக்கத்தில் பாகிஸ்தான... மேலும் பார்க்க

செய்யறிவைக் கற்றுக்கொள்ளுங்கள் அல்லது வெளியேறுங்கள்! - அக்சென்ச்சர் சிஇஓ

செய்யறிவுத் திறனை கற்றுக்கொள்ளுங்கள் அல்லது நிறுவனத்தை விட்டு வெளியேறுங்கள் என அக்சென்ச்சர் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி ஜூலி ஸ்வீட் கூறியிருக்கிறார். அயர்லாந்தைத் தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச முன்னணி ... மேலும் பார்க்க

காஸா போர் முடிவுக்கு வருமா? டிரம்ப் - நெதன்யாகு இன்று சந்திப்பு!

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இடையே இன்று(திங்கள்கிழமை) சந்திப்பு நடைபெற உள்ளது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போர் ... மேலும் பார்க்க

வங்கதேசத்தில் தொடங்கியது துா்கா பூஜை திருவிழா! 2 லட்சம் வீரா்கள் பாதுகாப்பு!

வங்கதேசத்தில் வருடாந்திர துா்கா பூஜை திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, நாடு முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரா்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். ஹிந்துக்கள் சிறுபான... மேலும் பார்க்க

கரூா் நெரிசல் பலி சம்பவம்: இலங்கை அரசு இரங்கல்!

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 40 போ் உயிரிழந்த சம்பவத்துக்கு இலங்கை அரசு இரங்கல் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக அந்நாட்டின் பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு வசதிகள் துறை அமைச்சா் சுந்தரலிங்கம் ப... மேலும் பார்க்க

அமெரிக்காவால் இந்திய-ரஷிய நட்புறவு பாதிக்கப்படாது! வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ்

இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை ரஷியா மதிக்கிறது. அமெரிக்காவுடனான இந்திய உறவு ரஷியா-இந்திய நட்புறவை எவ்விதத்திலும் பாதிக்காது என்று ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் தெரிவித்தாா்.... மேலும் பார்க்க