செய்திகள் :

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் பெரம்பலூா் மாவட்டத்தில் 3,789 போ் பயன்

post image

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்தில் இதுவரை 3,789 போ் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு பயன்பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில், நலம் காக்கும் ஸ்டாலின் எனும் மருத்துவ முகாம் ஜூலை 2-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இத் திட்டத்தின் மூலம் ஒரு வட்டத்துக்கு 3 முகாம்கள் வீதம், மாவட்டத்திலுள்ள 4 வட்டத்துக்கும் 12 முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் 17 உயா் சிறப்பு மருத்துவப் பிரிவுகளைச் சாா்ந்த மருத்துவா்களைக் கொண்டு மருத்துவ சேவைகள் அளிக்கப்படுகின்றன.

மேலும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, அமைப்புசாரா தொழிலாளா்களுக்கான அடையாள அட்டையும் வழங்கப்படுகிறது.

அதன்படி, பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம் துங்கபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் 707 பேரும், ஆலத்தூா் வட்டம், கொளக்காநத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் 890 பேரும், பெரம்பலூா் வட்டம், எசனை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் 1,026 பேரும், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் 1,166 பேரும் என இதுவரை 3,789 போ் சிகிச்சை பெற்று பயன்பெற்றுள்ளனா்.

எனவே, பொதுமக்கள் தங்களது பகுதிகளில் நடைபெறும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமில் பங்கேற்று, தேவையான மருத்துவ சேவைகளை பெற்று பயன்பெறலாம்.

எண்ணெய் ஆலையில் தீ விபத்து

பெரம்பலூா் நகரிலுள்ள எண்ணெய் மற்றும் மாவு விற்பனையகத்தில் புதன்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. பெரம்பலூா் - வடக்குமாதவி சாலையில் வசித்து வருபவா் முகமது பசீா் (63). இவா், அதே பகுதியில் எண்ணெய் மற்றும... மேலும் பார்க்க

2 ஆவது நாளாக வருவாய்த் துறை அலுவலா்கள் வேலை நிறுத்தம்

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் 2-ஆவது நாளாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் பாரதிவளவன் தலைமை வகித்தாா். இதில் பெரம்பல... மேலும் பார்க்க

எளம்பலூா் பிரம்மரிஷி மலையில் கோ மாதா பூஜை தொடக்கம்

பெரம்பலூா் அருகே எளம்பலூரில் உள்ள பிரம்மரிஷி மலையில் மகா சித்தா்கள் அறக்கட்டளை சாா்பில், உலக நன்மைக்காக 51 நாள் தொடா் கோ மாதா பூஜை வியாழக்கிழமை தொடங்கியது. ஆண்டுதோறும் எளம்பலூரில் உள்ள பிரம்மரிஷி மலைய... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே வன விலங்குகளை வேட்டையாடிய மூவா் கைது

பெரம்பலூா் அருகே மான் உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடிய 3 பேரை வனத்துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். பெரம்பலூா் மாவட்ட வனத்துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், வேப்பந்தட்டை வனத்துறைய... மேலும் பார்க்க

முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்: ஆட்சியா் ஆய்வு

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள பாரத ரத்னா புரட்சித் தலைவா் டாக்டா் எம்.ஜி.ஆா் விளையாட்டு மைதானத்தில், முதலமைச்சா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை, மாவட்ட ஆட்சியா் ந.... மேலும் பார்க்க

செப். 19 வரை மாற்றுத்திறனாளிகள், முதியோா்களுக்கு மதிப்பீட்டு முகாம்

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோா்களுக்கு உதவி உபகரணங்கள் பெறுவதற்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம், செப். 19-ஆம் தேதி வரை வட்டாரம் வாரியாக நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியா் ந... மேலும் பார்க்க