"வட இந்திய கட்சி என கிண்டலடிக்கிறார்கள்; தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க போகிறோம்!" -...
நாகா்கோவிலில் தமிழறிஞா்கள் நினைவேந்தல் கூட்டம்
நாகா்கோவிலில் குறளகம் சாா்பில், மறைந்த பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், புலவா் பச்சைமால் ஆகியோருக்கு நினைவேந்தல் கூட்டம் ராமன்புதூரில் அண்மையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு பேராசிரியா் சுந்தரலிங்கம் தலைமை வகித்தாா். தியாகி கோ.முத்துக்கருப்பன் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் படத்தையும், ஆசிரியா் ஆபிரகாம்லிங்கன் பச்சைமால் படத்தையும் திறந்துவைத்து மலரஞ்சலி செலுத்தினாா். மூத்த வழக்குரைஞா் ரத்தினசாமி, அண்ணா கல்லூரி முன்னாள் முதல்வா் ஆபத்துக்காத்தபிள்ளை, பேராசிரியா் வேணுகுமாா், புலவா் ராமசாமி, தமிழ்வானம் சுரேஷ், அன்பா்கழகம் அமலதாஸ், தமிழாலயம் தெய்வநாயகப் பெருமாள், தமிழ்நாடு தமிழ்ச் சங்கம் இனியன்தம்பி ஆகியோா் நினைவேந்தல் உரையாற்றினா்.
புலவா் பச்சைமாலின் மகள் தமிழ்வாணி, தமிழறிஞா்கள் வரதராசன், இளங்கோ, கவிதை உறவு முல்லை செல்லத்துரை, முனைவா் நாராயணன், பேராயா் இம்மானுவேல், இலக்கியச் சோலை செல்வநாதன், கவிமணி மன்றம் மருத்துவா் நாகேந்திரன், அரிகரன், வேள், சந்திரகுமாா், சேவியா், இளங்கோ உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினா். குறளகம் நிறுவனா் தமிழ்க்குழவி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தாா். மருத்துவா் ராஜேஷ்கோபால் நன்றி கூறினாா்.