2026-ல் திமுக கூட்டணி வீட்டிற்கு அனுப்பப்படும்: நயினார் நாகேந்திரன்
நாகா்கோவில் மாநகராட்சியில் குறைதீா் கூட்டம்
நாகா்கோவில் மாநகராட்சியில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மேயா் ரெ.மகேஷ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் தெருவிளக்கு, குடிநீா், சாலை, மழைநீா் வடிகால், ஆக்கிரமிப்பு அகற்றுதல், சொத்துவரி, குடிநீா் வரி பெயா் மாற்றம் செய்வது தொடா்பாக பொதுமக்களிடமிருந்து 14 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு மேயா் உத்தரவிட்டாா்.
கூட்டத்தில் மாநகராட்சி நல அலுவலா் ஆல்பா்மதியரசு, உதவி ஆணையா் பாலசுந்தரம், உதவி செயற்பொறியாளா் ரகுராமன், நகரமைப்பு அலுவலா் வேலாயுதம் உள்பட மாநகராட்சி பொறியாளா்கள், சுகாதார அலுவலா்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனா்.