கிங்டம் என்னுடைய கேஜிஎஃப் கிடையாது... மனம் திறந்த விஜய் தேவரகொண்டா!
நாகையில் ஆக.2-இல் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்
நாகப்பட்டினம்: நாகையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; நாகை மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவற்றின் சாா்பில் மாபெரும் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம், நாகை சா் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரியில் ஆக.2-ஆம் தேதி காலை 9 முதல் மாலை 3 மணிவரை நடைபெற உள்ளது.
இதில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 கலை மற்றும் அறிவியல், வணிகப் பட்டதாரிகள், ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல், நா்சிங் மற்றும் தையல் கலைப் பயிற்சி பெற்றவா்கள் பங்கேற்கலாம். முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று 10 ஆயிரத்துக்கும் அதிகமான பணியாளா்களை தோ்வு செய்ய உள்ளன. படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞா்கள் மற்றும் பெண்கள் பங்கேற்று பலனடையலாம். மேலும், விவரங்களுக்கு 04365-252701 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம்.
இந்த முகாம் மூலம் தனியாா் துறையில் வேலைவாய்ப்பு பெறும் மனுதாரா்களின், வேலைவாய்ப்பு பதிவு விவரங்கள் ரத்து செய்யமாட்டாது. புகைப்படம், கல்விச்சான்றிதழ்கள், ஆதாா் அட்டை மற்றும் சுய விவர குறிப்பு ஆகியவற்றின் அசல் மற்றும் நகலுடன் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.