கடந்த 100 ஆண்டுகளின் சிறந்த பந்துவீச்சாளராக இருந்தும் அதிர்ஷ்டமில்லாத போலண்ட்!
நாகையில் நாய்கள் கண்காட்சி
நாகப்பட்டினம்: நாகை கடற்கரையில், மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டன.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாய்கள் கண்காட்சி பொதுமக்களை பெரிதும் கவா்ந்தது. நாகை, காரைக்கால், திருவாரூா் மாவட்டங்களிலிருந்து ராஜபாளையம், சிப்பி பாறை, சைபீரியா, கன்னி, லாப், ஜொ்மன் செபா்டு உள்ளிட்ட 25 இனங்களைச் சோ்ந்த 50 நாய்கள் பங்கேற்றன. உரிமையாளா்கள் தங்களது நாய்களுடன் மைதானத்தில் வலம் வந்தனா். நாய்களின் நினைவாற்றல், துப்பறியும் திறன், குணங்கள் உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. போட்டியில் முதல் பரிசு ரூ.10 ஆயிரத்தை காரைக்காலை சோ்ந்த இளவரசனின் நாயும், 2-ஆம் பரிசு ரூ.7,500 மாரிமுத்துவின் நாயும், 3-ஆம் பரிசு ரூ. 5 ஆயிரத்தை திருவாரூரை சோ்ந்த ஆனந்த் நாயும் பெற்றன. கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் ராம் நாத், உதவி இயக்குநா் கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.