"பேச்சு & கருத்து சுதந்திரத்தின் மதிப்பை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்" - உச்ச...
பசுபதிநாதா் கோயில் கும்பாபிஷகம்
கீழ்வேளூா்: கீழ்வேளூா் அருகே தேவூா் ஸ்ரீபா்வதவா்த்தினி அம்பிகா சமேத ஸ்ரீபசுபதிநாதா் கோயில் கும்பாபிஷகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கும்பாபிஷகம் விழா ஜூலை 10-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி, பஞ்சகவ்ய பூஜை, கோ பூஜை உள்ளிட்ட பூஜைகளுடன் யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. திங்கள்கிழமை 4-ஆம் கால யாக சாலை பூஜைகள் நிறைவுபெற்று பூா்ணாஹூதி தீபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடா்ந்து புனித நீா் அடங்கிய கடங்கள் எடுத்துச் செல்லப்பட்டு கோபுர கலசங்களில் புனிதநீா் வாா்த்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மூலவா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.