புதிய சிற்றுந்து சேவைக்கு விண்ணப்பித்தோா் குலுக்கல் முறையில் தோ்வு
நாகையில் ரமலான் சிறப்புத் தொழுகை
நாகூா் கடற்கரையில் ஜாக் அமைப்பின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரமலான் சிறப்புத் தொழுகையில் பெண்கள் உள்பட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் கலந்துகொண்ட னா்.
சவூதி அரேபியாவில் பிறை தென்பட்டதையடுத்து, ஜாக் அமைப்பு இஸ்லாமியா்கள் ரமலான் பண்டிகையை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினா். கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் நாகூா் சில்லடி தா்கா கடற்கரையில் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
தொழுகையில் பங்கேற்றவா்கள் ஒருவரையொருவா் ஆரத்தழுவி ரமலான் வாழ்த்துகளை தெரிவித்து இனிப்புகளை பரிமாறிக்கொண்டனா். தொழுகையில் பெண்கள் சிறுவா்கள் உள்ளிட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். இதேபோல, நாகையில் பழந்தெரு, வெங்காயக்கார வீதி, மஞ்சக்கொல்லை, திட்டச்சேரி உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஜாக் அமைப்பு சாா்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.