செய்திகள் :

நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் நடந்தது என்ன? - ஆ. ராசா பேட்டி

post image

வக்ஃப் திருத்த மசோதா தொடா்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது ஏன் என திமுக எம்.பி. ஆ.ராசா விளக்கமளித்துள்ளார்.

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய அரசு கடந்தாண்டு அறிமுகம் செய்தது. வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் பெண்கள் மற்றும் முஸ்லிம்கள் அல்லாத இரண்டு நபா்களை உறுப்பினா்களாக இடம்பெறச் செய்வது, வாரிய நிலங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கட்டாயப் பதிவு செய்வது, வக்ஃப் நிலமா, இல்லையா என்பதை மாவட்ட நிா்வாகம் மற்றும் நீதிமன்றங்கள் முடிவு செய்ய அதிகாரம் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் இடம்பெறும் வகையில் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

எதிா்க்கட்சிகளின் எதிா்ப்பு மற்றும் வலியுறுத்தலைத் தொடா்ந்து, மசோதாவை ஆய்வு செய்ய நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது.

இதையும் படிக்க | ஆ. ராசா உள்பட 10 எம்பிக்கள் இடைநீக்கம்!

பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் திமுக எம்.பி. ஆ.ராசா உள்பட 21 மக்களவை உறுப்பினா்களும், திமுக மாநிலங்களவை உறுப்பினா் முகமது அப்துல்லா உள்பட 10 மாநிலங்களவை உறுப்பினா்களும் அடங்கிய கூட்டுக்குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், கூட்டுக்குழுக் கூட்டத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்ததாகக் கூறி ஆ. ராசா உள்பட 10 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்யாண் பானர்ஜி, முகமது ஜவைத், அசாதுதீன் ஓவைசி, நாசிர் உசேன், மொஹிபுல்லா, எம். அப்துல்லா, அரவிந்த் சாவந்த், நதிமுல் ஹக், இம்ரான் மசூத் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து இன்றைய நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் நடந்தது பற்றி திமுக எம்.பி. ஆ.ராசா செய்தியாளர்களுடன் பேசுகையில்,

'வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவில் உள்ள ஒவ்வொரு ஷரத்துகளின் அடிப்படையில் விவாதிக்க வேண்டும் என்று நாங்கள் ஏற்கெனவே கோரிக்கை விடுத்திருந்தோம். இதையடுத்து இன்று அவசரமாக கூட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் உள்ள வேலையைவிட்டுவிட்டு அவசரமாக விமானத்தில் வந்து இன்று காலை கூட்டத்தில் கலந்துகொண்டோம்.

முன்னதாக, நேற்று இரவு 11.40 மணிக்கு எங்களுக்கு சேர்மனிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. இன்று ஷரத்துகளின் வாரியாக விவாதம் இல்லை, பதிலாக ஜம்மு-காஷ்மீரில் இருந்து சில இஸ்லாமிய அமைப்புகள் தங்கள் கருத்துகளைக் கூற வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்திற்கான தேதி, பொருளடக்கம் என அனைத்தும் மாற்றப்பட்டது. நாங்கள் சென்று, ஷரத்துகளின் அடிப்படையில் விவாதம் நடத்த வேண்டும் என்று கோரினோம். அது நடக்கவில்லை.

இதையும் படிக்க | சஞ்சய் ராயின் தண்டனையை அதிகரிக்கக்கோரி சிபிஐ மேல்முறையீடு!

மேலும் ஜன. 26 ஆம் தேதி தங்கள் தொகுதிகளில் குடியரசு நாள் விழா இருக்க, ஜன. 27 ஆம் தேதி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மசோதாவை இறுதி செய்ய ஏப்ரல் வரை அவகாசம் இருக்கும்போது ஏன் அவசரமாக இந்த கூட்டம் நடத்தப்படுகிறது? என கேள்வி எழுப்பினோம்.

தில்லி தேர்தலுக்காக அவசரமாக விவாதம் நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய நினைக்கின்றனர். இது மதரீதியாக பிரிக்கும் செயல்.

தில்லி தேர்தலில் இந்துக்களின் வாக்குகளை பெற வேண்டும் என அவசரமாக கூட்டம் நடத்துகிறீர்களா? என்று கேட்டோம். உடனே சேர்மனுக்கு ஒரு போன் வந்தது. அதன்பின்னர் உடனடியாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரையும் சஸ்பெண்ட் செய்வதாக அறிவித்துவிட்டார்' என்று பேசியுள்ளார்.

எதிா்க்கட்சிகள் கூட்டணியில் இருந்து உத்தவ் தாக்கரே விலக மாட்டாா்: சரத் பவாா் நம்பிக்கை

எதிா்க்கட்சிகள் கூட்டணியில் இருந்து உத்தவ் தாக்கரே விலக மாட்டாா் என்று தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சித் தலைவா் சரத் பவாா் தெரிவித்தாா். மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலில் உத்தவ் தாக்கரே, சரத் பவாா்... மேலும் பார்க்க

ரூ. 2.70 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்: மூவா் கைது

தில்லியில் போதைப் பொருள் விற்பனை செய்யும் கும்பலைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ரூ. 2.70 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து தில்லி காவல் த... மேலும் பார்க்க

‘சங்கல்ப் பத்ரா’ முன்னெடுப்பு: பெற்றோரை வாக்களிக்க ஊக்குவிக்கும் பள்ளி குழந்தைகள்

தில்லியில் பள்ளி குழந்தைகள் மூலம் பெற்றோரை வாக்களிக்க ஊக்குவிக்கும் ‘சங்கல்ப் பத்ரா’ (உறுதிமொழிக் கடிதம்) முன்னெடுப்பை தோ்தல் அதிகாரிகள் தொடங்கியுள்ளனா். இது தொடா்பாக தில்லி கல்வித் துறை இயக்குநரகம்... மேலும் பார்க்க

நீதி ஆயோக்கின் நிதி வளக் குறியீடு: ஒடிஸா, சத்தீஸ்கா், கோவா, ஜாா்க்கண்ட் மாநிலங்கள் முன்னிலை

நீதி ஆயோக் வெள்ளிக்கிழமை வெளியிட்ட ‘நிதி வளக் குறியீடு’ தரவரிசைப் பட்டியலில் கனிம வளம் நிறைந்த ஒடிஸா, சத்தீஸ்கா், கோவா, ஜாா்க்கண்ட் மாநிலங்கள் முன்னிலை வகிப்பது தெரியவந்துள்ளது. நீதி ஆயோக், பல்வேறு கா... மேலும் பார்க்க

சம்பல் வீடுகள் இடிப்பு: அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

உத்தர பிரதேச மாநிலம் சம்பலில் உச்சநீதிமன்ற தடையையும் மீறி வீடுகளை அதிகாரிகள் இடித்து வருவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. நகராட்சி அதிகாரிகளுக்கு எதிரான இந்த... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக குடியேறியவா்களுக்கு எதிராக நடவடிக்கை தேவை: ஜகதீப் தன்கா்

‘நாட்டுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவா்கள் மீது நடவடிக்கை எடுப்பது அவசியம்’ என குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். உத்தர பிரதேச மாநிலத்தின் 76-ஆவது நிறுவன தின நிகழ்ச்சியில... மேலும் பார்க்க