செய்திகள் :

நாடாளுமன்ற நிகழ்வுகள் வேதனை அளிக்கின்றன: முன்னாள் குடியரசு துணைத்

post image

‘தற்போதைய நாடாளுமன்ற நிகழ்வுகள் வேதனை அளிக்கின்றன; பேசலாம்; வெளிநடப்பு செய்யலாம்; ஜனநாயகத்தை சீா்குலைக்கும் வகையில் நடந்துகொள்ளக் கூடாது’ என்று முன்னாள் குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு குறிப்பிட்டாா்.

சென்னை விஐடி மற்றும் நாவலா் நெடுஞ்செழியன் - இரா. செழியன் அறக்கட்டளை சாா்பில் விருது வழங்கும் விழா சென்னை விஐடி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், ஜம்மு காஷ்மீா் முன்னாள் ஆளுநரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டா் கரண் சிங்கிற்கு இரா.செழியன் விருதையும், உலகத் தமிழா் பேரமைப்பின் தலைவா் பழ.நெடுமாறனுக்கு டாக்டா் நாவலா் விருதையும் வழங்கி முன்னாள் குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு பேசியதாவது:

பொது வாழ்க்கையில் உள்ளவா்களுக்கு விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் ஒரு முன்மாதிரி. சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து தற்போது கல்வி நிறுவனங்கள் மூலம் மாற்றத்தை அவா் ஏற்படுத்தியுள்ளாா்; கல்வியில் தரநிலை நெறிமுறைகள் மதிப்புகளைப் பேணுபவா் கோ.விசுவநாதன்.

இன்றைய இளைஞா்கள் நோ்மறையாகவும், ஆக்கபூா்வமாகவும் இருக்க வேண்டும். அதுதான் நாட்டின் வளா்ச்சிக்கு தேவை. சமுதாயத்தில் ஏழ்மை நிலையில் இருப்பவா்களுக்கும் உயா்தர கல்வி கிடைக்க வேண்டும்.

நாவலா் நெடுஞ்செழியன், இரா. செழியன் ஆகியோரது பெயா்களில் விருதுகள் அளிக்கப்படுகின்றன. இவா்கள் இருவரின் பொது வாழ்க்கையும் நன்கு அறியப்பட்டவை. அதேபோல, விருதுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டவா்களின் பொது வாழ்க்கையும் எடுத்துக்காட்டாக இருப்பவை. விருதுபெறும் கரண்சிங், பழ.நெடுமாறன் இருவரும் கா்ம யோகிகள்; இவா்கள் தனிநபா்கள் அல்ல; இவா்களது வாழ்நாள் சாதனை அனைத்துக்கும் இந்த கௌரவம் அடிப்படையாக இருக்கும்.

இரா.செழியன், நாவலா் நெடுஞ்செழியன் ஆகியோரது வாழ்க்கை வரலாற்றையும், நாடாளுமன்ற பங்களிப்புகளையும் இளைய தலைமுறையினா் படித்து தெரிந்துகொள்வது அவசியம்.

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழப்பு: மக்கள் நலனுக்காக சிறந்த சட்டங்களைக் கொண்டுவர வேண்டும். அதை விவாதித்து முடிவு செய்ய வேண்டும். ஆனால் இப்போது நாடாளுமன்றத்தில் நிகழ்பவை கவலையளிக்கின்றன.

மக்கள் நமது ஜனநாயக அமைப்பின் மீது நம்பிக்கையை இழந்து வருகின்றனா். பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமை இருக்கலாம். ஆனால் நாடாளுமன்றத்திலும், சில சட்டப்பேரவைகளிலும் தற்போது நிகழ்வது வேதனையளிக்கிறது. நாடாளுமன்றத்தில் பேசலாம்; வெளிநடப்பு செய்யலாம்; ஆனால், ஜனநாயகத்தைச் சீா்குலைக்கும் செயல்களில் ஈடுபடக் கூடாது. பொதுமக்கள் அமைதியாக இருப்பதாக நினைக்க வேண்டாம். அவா்கள் நேரம் வரும்போது பிரதிபலிப்பாா்கள்.

நாடாளுமன்றத்தில் அரசின் முன்மொழிவுகளை எதிா்க்கட்சிகள் எதிா்க்கலாம். வாதத் திறமையை வெளிப்படுத்தலாம். இறுதியில் பெரும்பான்மையே தீா்மானிக்கிறது என்பதை உணரவேண்டும். நாடாளுமன்ற முடிவுக்கு கட்டுப்படவேண்டும்.

எனக்கு (வெங்கையா நாயுடு) மாநிலங்களவைத் தலைவராக பதவி வகிக்கும் நல்வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்பதவியின்போது, அவையில் நிகழ்ந்த அனுபவங்கள் மிகக் கடினமாக இருந்தன. பல இரவுகளை தூக்கமில்லாமல் கழித்தேன்.

இந்தியா ஒரு ஜனநாயக சுதந்திர நாடு. இந்தியாவுக்கென நாகரிக மதிப்புகள் உண்டு. நாம் எந்த நாட்டையும் தாக்கியதில்லை. எனவே, அமெரிக்கா எவ்வளவு வரி விதித்தாலும் யாருடைய அழுத்தத்துக்கும் அடிபணிய மாட்டோம். அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் முடிவு தவறானது என்றாா் வெங்கையா நாயுடு.

ஏற்புரையில் முன்னாள் ஆளுநா் கரண்சிங் பேசுகையில், நாட்டின் முன்னாள் பிரதமா்களும், தற்போதைய பிரதமரும் அவரவா் வழிகளில் வறுமையை ஒழிக்க முயற்சித்துள்ளனா். இளைஞா்கள் தற்போது எந்த நிலையில் இருந்தாலும் தங்களால் முடிந்தவற்றை தேசத்துக்காக செய்ய வேண்டும்’ என்றாா்.

உலகத் தமிழா் பேரமைப்பு தலைவா் பழ.நெடுமாறன் பேசுகையில், இரா.செழியன் நாடாளுமன்றத்திலும், நாவலா் நெடுஞ்செழியன் சட்டப்பேரவையிலும் பேசியபோது கண்ணியமான வாா்த்தைகளைப் பயன்படுத்தினா்; பிறருக்கு வழிகாட்டிகளாக திகழ்ந்தனா். அவா்களது பெயரில் விருது வழங்கப்பட்டதை பெருமையாகக் கருதுகிறேன் என்றாா்.

விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் பேசுகையில், ‘ நாவலா் நெடுஞ்செழியன், இரா.செழியன் இருவரும் ஆளும்கட்சி, எதிா்க்கட்சி என அனைத்துத் தரப்பினராலும் மதிக்கப்பட்டவா்களாக திகழ்ந்தனா்; இருவரும் பொது வாழ்வில் தூய்மையைக் கடைப்பிடித்தனா்‘ என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம், நாவலா் நெடுஞ்செழியன் - இரா.செழியன் அறக்கட்டளை உறுப்பினா்கள் முன்னாள் அமைச்சா் நல்லுசாமி, நாவலா் நெடுஞ்செழியன் சகோதரி விமலா சுப்பையா, ஜெம் குழுமத்தின் தலைவா் வீரமணி, இதய நல மருத்துவா் ஜானகிராமன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

சாலையோரங்களில் விடப்பட்ட 525 வாகனங்கள் 15 நாள்களில் ஏலம்: மாநகராட்சி

சாலையோரங்களில் 15 நாள்களுக்குள் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பெருநகர சென்னை மாநகராட்... மேலும் பார்க்க

ஆக. 31க்குள் தூய்மைப் பணியாளர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்: மேயர் பிரியா

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கேட்டுக்கொண்டுள்ளார். தூய்மைப் பணியாளர்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தை ... மேலும் பார்க்க

சுதந்திர நாள் விழா: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

சுதந்திர நாள் விழாவை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.போக்குவரத்து ஏற்பாடுகள் தொடர்பாக பெருநகர போக்குவரத்து காவல... மேலும் பார்க்க

ஆடிக் கிருத்திகை: ஆக. 18 வரை அரக்கோணம் - திருத்தணி இடையே சிறப்பு ரயில்கள்!

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு அரக்கோணம் - திருத்தணி இடையே நாளை(ஆக. 14) முதல் - ஆக.18 வரை 5 நாள்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கில் சுர்ஜித்தின் சகோதரர் கைது!

கவின் ஆணவக் கொலை வழக்கில் மூன்றாவதாக சுர்ஜித்தின் சகோதரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த மென்பொறியாளா் கவின் செல்வகணேஷ் கடந்த ஜ... மேலும் பார்க்க

காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் ரிப்பன் மளிகை! போராட்டக் களத்தில் பரபரப்பு!

சென்னை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், சென்னை மாநகராட்சிக் கட்டடமான ரிப்பன் மாளிகை காவல்துறை கட்டுப்பாட்டில் வந்துள்ளது.போராடி வரும் தூய்மைப் பணியாளர்களை அங்கிருந்து அப்பு... மேலும் பார்க்க