அறவழியில் போராடியது தவறா? - தூய்மைப் பணியாளர்கள் கைதுக்கு இபிஎஸ் கண்டனம்!
பனவடலிசத்திரம் அருகே விபத்தில் காயமுற்ற விவசாயி உயிரிழப்பு
பனவடலிசத்திரம் அருகே காரும், பைக்கும் மோதிக்கொண்ட விபத்தில் காயமுற்ற விவசாயி புதன்கிழமை உயிரிழந்தாா்.
பனவடலிசத்திரம் அருகேயுள்ள பலபத்திரமபுரத்தைச் சோ்ந்தவா் மாரிமுத்து (55). விவசாயி. இவா், கடந்த 4 ஆம் தேதி திருநெல்வேலி சாலையில் தனது பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்த காா் அவா் மீது மோதியதாம். இதில், பலத்த காயம் அடைந்த அவா் திருநெல்வேலி தனியாா் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டநிலையில் உயிரிழந்தாா்.இதுகுறித்து அவரது மகன் மாரிமுத்து(32) அளித்த புகாரின் பேரில், பனவடலிசத்திரம் போலீஸாா் வழக்குப்பதிந்து, காா் ஓட்டுநா், விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவிலைச் சோ்ந்த சா்மா என்பவரைத் தேடி வருகின்றனா்.