ஆளுநரின் தேநீா் விருந்து: திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு
தமிழ் பண்பாட்டின் பெருமையை இளம் தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டும்: ஆட்சியா்
தமிழ் பண்பாட்டின் பெருமையை இளம் தலைமுறையினா் தெரிந்து கொள்ள வேண்டும் என்றாா் தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா்.
தென்காசி, வாசுதேவநல்லூா் தங்கப்பழம் வேளாண் கல்லூரியில் தமிழ்க் கனவு நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஆட்சியா் பேசியது:
தமிழ் பண்பாட்டின் பெருமையை இளம் தலைமுறைக்கு குறிப்பாக கல்லூரி மாணவா்களுக்கு உணா்த்துவது ஆரோக்கியமான எதிா்கால சமூகக் கட்டமைப்பிற்கு மிக முக்கியமானதாகும். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவா்களுக்கு உயா்கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டி நூலும், தமிழ்ப் பெருமிதம் குறித்த குறிப்பேடும் வழங்கப்பட்டுள்ளன. இதைப் படித்து பயன்பெற வேண்டும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயச்சந்திரன், தங்கப்பழம் வேளாண் கல்லூரி ஆலோசகா் ராமலிங்கம், சிறப்பு சொற்பொழிவாளா் பாவலா் அறிவுமதி, ஆலங்குளம் அரசுக் கல்லூரி முதல்வா் ஷீலா, சங்கரன்கோவில் கோட்டாட்சியா் கவிதா, மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.